என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும். ஏற்கனவே தமிழகத்திற்கு 26 டி.எம்.சி. முதல் 30 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

    இந்தியாவில் இன்று தேசிய விளையாட்டும் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தயான் சந்த் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகை இன்று கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக கருதப்படும் என்றார்.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதேச்சதிகார ஆட்சியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுவது உறுதி. பா.ஜனதா டிசம்பர் அல்லது ஜனவரிலேயே தேர்தலை நடத்தும் வாய்ப்பு உள்ளது. காவி கட்சி ஏற்கனவே சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் நாடாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வெறுப்பு நாடாக மாற்றிவிடுவார்கள் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அப்போது, ஜி20 மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியாது என்றும் ரஷிய பிரதிநிதியாக வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார் எனவும் பிரதமர் மோடியிடம் புதின் கூறினார்.

    திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பயன்பாட்டிற்காக கொண்டுசெல்ல வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிக்காக மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாய், பின்னர் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

    நிலவின் மேற்பரப்பில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை பிரக்யான் ரோவர் சாதுர்யமாக தவிர்த்தது என்றும், 3 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே துல்லியமாக கண்டறிந்ததால் பாதையை மாற்றிக் கொண்டு சமதள பாதையில் நகர்ந்து சென்றது என்று இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது எனவும் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் பட்டியலை ஒப்படைத்துள்ளனர். சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

    ×