என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    முதல் நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-0,6-2, 6-3 என்ற நேர்செட்டில் 84ம் நிலை வீரரான அலெக்சாண்டர் முல்லெரை (பிரான்ஸ்) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் 36 வயதான ஜோகோவிச், கார்லஸ் அல்காரஸ்சை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி உலக ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

    டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், டெல்லியின் என்.சி.டி.-க்கு உட்ப்ட்ட பகுதிகளின் வான் பரப்பில் பறக்கும் பொருட்கள்- அதாவது பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிளைடர்கள், யு.ஏ.வி.-க்கள், யு.எஸ்.எஸ்., மிகக் குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க அனுமதி கிடையாது என டெல்லி காவல் துறை ஆணயரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சல்ஃபர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்து இருக்கிறது. இத்துடன் நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. 

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முதல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டி மட்டுமின்றி சென்னையில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டிக்கான டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடம் பிடித்தார். இது அவரது சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதால் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பெற்றார்.

    ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என தெரிவித்தார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். வழக்கம்போல் இம்முறையும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டது.

    மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரக்ஷாபந்தனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என தெரிவித்துள்ளார்.

    ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் புளூ மூன் எனப்படும் நிகழ்வு நாளை(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

    சூரியன் மறைந்த உடனேயே புளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும். இந்த முறை புளூ மூன் தோன்றும்போது, நாளை இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த காட்சி இதற்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் தான் தோன்றும்.

    பா.ஜனதா தலைவர் ஹெச். ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைத்து 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தால் கேரள மாநிலம் முழுவதும் இன்று களை கட்டி காணப்பட்டது. அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்களின் வீடுகளில் பல வகையான சிறப்பு உணவுகளை தயாரித்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ×