என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை பா.ஜனதா எம்.பி.க்கள் சேவை மற்றும் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ரன்களை குவித்து அசத்தியது. நேபாளம் அணி 104 ரன்களை குவித்த நிலையில், 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

    ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும் முழு நிலவு புளூ மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகிறார்கள். இன்று வானில், புளூ மூன் தென்பட்டது. இதனை பொதுமக்கள் வெறும் கண்களில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

    பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து கொண்டே ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர், இன்று காலை விக்ரம் லேண்டரை பிடித்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நேற்று நிலவில் சல்பைடு இருப்பதை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பைக்கான வங்காளதேச அணியில் இருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் விலகியுள்ளார். வைரஸ் காய்ச்சலில் இருந்து முழுமையாக குணமடையாததால், விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சமையல் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில் "தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி! ரூ. 1100-க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்! வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!" என ப. சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் நாங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் மறுபடியும் சுப்ரீம்கோர்ட்டை அணுகுவதுதான் எங்களுக்குள்ள ஒரே வழி. வருகிற 1-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் அ.தி.மு.க. மாநாடு வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜைகள் செய்து விசேஷ வழிபாடுகள் செய்யப்பட்டன. அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை கொடுக்கப்பட்டது.

    ரஷியாவின் ஆறு பிராந்தியங்களை குறிவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பிஸ்கோவ் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையம் பாதிப்படைந்துள்ளது. நான்கு போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 18 மாதங்களாகிறது. இதில் தற்போது நடைபெற்ற தாக்குதல் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

    அருணாச்சல பிரதேசம் மாநிலத்தை இணைத்து சீனா 2023 வரைபடத்தை வெளியிட்டுள்ளது. லடாக்கில் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று மோடி கூறுவது பொய் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். சீனா அத்துமீறி நடந்த கொண்டது ஒட்டுமொத்த லடாக்கிற்கே தெரியும். இந்த வரைபடம் விசயம் முக்கியமானது. அவர்கள் நமது நிலத்தை எடுத்து விட்டார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ள நிலையில், மோடி அரசு கடந்த 9.5 ஆண்டுகளாக 31.37 கோடி மக்களிடம் சிலிண்டர் விலையை உயர்த்தி கொள்ளை அடித்துள்ளது. அதுவும், 8.33 லட்சம் கோடியை மக்கள் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில் பயனடையும் பெண்கள் பாக்கெட்டில் இருந்து, 2017-ல் இருந்து 68,702.76 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி மோடி அரசு நினைவு கூர்ந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சனம் செய்துள்ளார்.

    ×