என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை அ.தி.மு.க. கட்சி உறுதியாக ஆதரிக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

    இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. பூனேவில் உள்ள இந்த நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 

    நமது பிரதமர் இந்தியா கூட்டணிக்கு செய்தி தொடர்பாளர் ஆகிவிட்டார். நமது கூட்டணியை பற்றி இழிவாக பேசி நமக்கு விளம்பரம் தேடிக் கொடுத்து வருகிறார். இந்தியா கூட்டணியை பிரபலப்படுத்தி வரும் நமது பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்த அலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


    "சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தில் "சந்திரயான் 3" கட்டுரையை சேர்ப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் அழைப்பின் பேரில், அவரது இல்லத்திற்கு குடும்பத்தாரோடு சென்ற பிரக்ஞானந்தா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து இருக்கிறார்.

    2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியின்போது வருவாய்த்துறை மந்திரியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பின் வாபஸ் பெறப்பட்டு, ஓ.பி.எஸ். விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது ஏ.பி.எஸ். மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த் தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறினர். திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்தை இங்கிலாந்தும், தென்ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தினர். இங்கிலாந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியா 112 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்கோர்:

    நியூசிலாந்து 139-9, இங்கிலாந்து- 143-3 (14)

    ஆஸ்திரேலியா 226-6

    தென்ஆப்பிரிக்கா 115-10 (15.3)

    காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் மாண்டியாவில் விவசாயிகள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×