என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது. 

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 266 ரன்களை குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி 267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ராம் நாத் கோவிந்த் எட்டு பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இதில் மத்திய மந்திரி அமித் அஷா, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்.கே. சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி ஆகியோர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. 

    பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தலைத்து ஒங்கவும், முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நாடு முன்னேற்றம் அடைய அடிக்கடி தேர்தல் வராமல் ஒரு முறை தேர்தல் வர வேண்டும் என்று கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


    ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருகிற 7-ந் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

    கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, அமலாக்கத்துறை இயக்குனரகம் அவரிடம் விசாரணை நடத்தியது. மே 5-ம் தேதி மும்பையில் நரேஷ் கோயல் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சி.பி.ஐ. பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி வரிவசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரிவசூல் ரூ.1,59,069 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 2022, ஆகஸ்டில் ரூ.1,43,612 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வரிவசூல் இந்தாண்டு ஆகஸ்டில் 1.59 லட்சம் கோடியாக உயர்ந்ததன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திட்ட கமிட்டியில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, பிரச்சார கமிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சமூக வலைதளங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் ஊடகங்களுக்கான பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஆராய்ச்சி பணிக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் அ. ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ×