என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க மாவட்டம்தோறும் சென்று பொதுக்கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து. இந்த சந்திப்புக்கு 'புரட்சி பயணம்' என்று பெயரிட்டார். இதன் துவக்கமாக இன்று காஞ்சிபுரம் அருகே கலியனூர் பொதுக்கூட்டத்தில் பேச திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய பொதுக்கூட்டம் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், வேறொரு நாளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்று இருக்கும் பண்ரூட்டி ராமச்சந்திரன் அறிவித்து இருக்கிறார்.

    "தி.முக. தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உள்ளிட்டோர் சனாதன தர்மம் அகற்றப்பட வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் வாக்கிற்காக சனாதன தர்மம் குறித்து பேசி வருகிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை கலங்கப்படுத்தி உள்ளனர்," என்று மத்திய மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். 

    தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயமாகும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதன்படி சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு கோவை விரைந்தனர். அங்கு சீமானை சந்தித்து சம்மனை நேரில் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே நேரத்தில் சீமானை போலீசார் கைது செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் சீமான் தங்கி இருக்கும் இடத்துக்கே போலீசார் விரைந்து சென்று முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும் விஷக் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்ற பாதிப்பு அதிகரித்து வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரள மாநிலத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழையாக நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஆலப்புழா மாவட்டத்திற்கு நாளை மற்றும் 5-ந்தேதியும், இடுக்கி மாவட்டத்திற்கு 6-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், மார்க்கெட் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும். வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஒடிசாவின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 291 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். புவனேஸ்வர் நகரில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது என இஸ்ரோ அறிவித்தது. ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதிக்கு பின் ரோவர் மீண்டும் உயிர்பெற்று பணியைத் தொடரலாம். மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

    ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷான் கிஷன் 82 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 87 ரன்னும் குவித்தனர். மழையால் 2வது பகுதி பாதிக்கப்பட்டு, போட்டி ரத்தானது. இதன்மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

    இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

    ×