என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால், 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். 

    "பொறுப்புள்ள அரசியல்வாதியாக, இதுபோன்று துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் கலாசாரம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு, ஆனால் திரு உதயநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு நான் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று காங்கிரஸ் தலைவர் கரண் சிங் தெரிவித்து இருக்கிறார்.  

    அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார். டெங்கு, மலேரியா உங்கள் குடும்பத்திலேயே முற்றியிருக்கிறதே. அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி சனாதனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதலில் உண்டியலில் இருந்து கையை எடுங்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    செப்டம்பர் 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை ஒட்டி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

    வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்திற்குள் நாளை இரவு அல்லது புதன்கிழமை காலை உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை மட்டுமல்ல, அவர் மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கையும், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சிறப்பு கோர்ட்டில் இருந்து, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    "Speaking for INDIA" என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ் இன்று வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோவில் கூறி உள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் விண்வெளி சாதனையை உலகமே கொண்டாடுகிறது. பொருளாதாரத்தில் மிக விரைவில் 3-வது இடத்தை இந்தியா எட்டும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக மாறும் என்றார்.

    ×