என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிபர் ஜோ பைடனுக்கு இரு தினங்களாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார். பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு நட்புறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டது. ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட 3டி வடிவ புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, இப்புகைப்படத்தை சிவப்பு, சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 2 ரன்னில் வென்ற இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

    சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், தொடர்ந்து அதற்காக குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற விழாவில் ''அம்பேத்கர் சொன்னதைத்தான் நான் சொன்னேன். தந்தை பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன். தி.மு.க. எதற்காக தொடங்கப்பட்டதோ, அதற்காகத்தான் நான் குரல் கொடுத்தேன்'' என்றார்.

    இந்தியா பாரத் என பெயர் மாற்றப்படலாம் என்ற செய்தி வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.

    இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.

    அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா பெயர் பாரத் என மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், நமது தேசிய அடையாளம் பா.ஜனதாவின் தனிப்பட்ட சொத்து அல்ல என ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர். கடந்த வருடம் உலகின் முன்னணி சமூக உரையாடல்களுக்கான வலைதளமான டுவிட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார். இந்நிலையில் "எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்" என எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.

    நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

    "மக்கள் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நாம் 'இந்தியா' என நம் நாட்டை அழைக்க கூடாது. அதற்கு பதிலாக 'பாரத்' என அழைக்க தொடங்க வேண்டும்," என ராஷ்ட்ரீய சேவா சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். பல வாக்குசாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காக காலை முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கமாக சுழற்சி முறையில் ஒரு காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 8-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சாமியாரின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது அவர், "என் தலைக்கு எதற்கு ரூ.10 கோடி ? ஒரு சீப்பு தந்தால் நானே என் தலையை சீவி கொள்வேன்" என்றார்.

    ×