என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கட்சி ஏன் அவருக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை? நீங்கள் திரவுபதி முர்முக்கு எதிராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாகவே வாக்களித்தீர்கள், அவர் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? இந்த நாட்டின் குடிமக்களாக நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், அதுதான் சனாதன தர்மம் என்று தமிழ் நாடு பா.ஜா.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைமை போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இதில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பி, அதுபற்றிய விவாதம் நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அந்த வகையில் இந்த முறை சரியான விதிகளுடன் விவாதம் மற்றும் ஆலோனைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் இந்தியர்களுக்கு "காத்திருப்பு காலம்" சுமார் 134 வருடங்கள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    சட்டரீதியான குடியேறுதலுக்கான முயற்சிகளில் உள்ள நீண்ட காலதாமதத்தை தவிர்க்க தற்போதைய ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், விண்ணப்ப தொகுப்பில் சேர்க்கப்பட்டு பிறகு அது ஏற்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு இறுதியாக கிரீன் கார்டு வாங்குவதற்கு அதிர்ஷ்டமும் தேவைப்படும் எனும் நிலை தோன்றி விட்டதாக அங்கு குடியேற துடிக்கும் இந்தியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்குமிடையே ஒரு தாராள வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) ஏற்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரிட்டன் முழுவதிற்கும் பலனளிக்க கூடிய ஒரு ஒப்பந்த முயற்சிக்குத்தான் இங்கிலாந்து பிரதமர் ஒப்புதல் அளிக்க விரும்புகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடக மாநில மந்திரி பரியங்க் கார்கே மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

    எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவது போன்று "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகருக்கான புதிய போக்குவரத்து திட்டத்தில் அண்ணா நகர், தி.நகர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2.50 லட்சம் பொதுமக்களிடம் நேரடியாக கருத்து கேட்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டுள்ளது.

    உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் கம்மின்ஸ் உடன் ஏழு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கம்மின்ஸ், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஆலேக்ஸ் கேரி, 4. ஜோஸ் இங்கிலிஸ், 5. சீன் அப்போட், 6. ஆஸ்டோன் அகர், 7. கேமரூன் க்ரீன், 8. ஜோஷ் ஹேசில்வுட், 9. டிராவிஸ் ஹெட், 10. மிட்செல் மார்ஷ், 11. மேக்ஸ்வெல், 12. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 13. டேவிட் வார்னர், 14. ஆடம் ஜம்பா, 15. மிட்செல் ஸ்டார்க்.

    சேலம் அருகே சங்ககிரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×