என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    செப்டம்பர் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் சென்னை மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், நில நிர்வாக இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்து இருக்கிறது.

    "மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்று உயர்த்தப்படுகிறது" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃப்யுமியொ கிஷிடா, ஜெர்மன் அதிபர் ஓலஃப் ஷோல்ட்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான், சவுதி அரேபிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் டாயிப் எர்டோகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரடார் ஆகியோர் பல்வேறு காரணங்களால் வரவில்லை.


    அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மம் குறித்து பேசியது, திரித்து பொய்ச்செய்தியாக வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசிய நிலையில், உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான பாதையில் லாக்ரஞ்சியன் புள்ளி எனப்படும் L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா, அதனுள்ளே பொருத்தப்பட்ட அதி நவீன கேமிரா மூலம் தன்னையும், பூமியையும் மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக மகிழ்ச்சியுடன் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (டுவிட்டர்) சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

    சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகிய நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடியும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 9 ஆண்டு கால மோடி அரசை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். விமானம் மூலம் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சென்னை பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.இந்நிலையில், ஆளுநர் வெளியிட்ட அறிக்கையினை தமிழ்நாடு அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்காளதேசம் 193 ரன்கள் எடுத்தது. தொட்ரந்து ஆடிய பாகிஸ்தான் 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இமாம் ஹல் உக் 78 ரன்னும், முகமது ரிஸ்வான் 63 ரன்னும் எடுத்தனர்.

    ×