என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    "இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் உலக தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மனமார வரவேற்கிறேன். இந்தியாவின் 'வசுதைவ குடும்பகம்' எனப்படும் இம்மாநாட்டிற்கான மையக்கருத்து, உலகளாவிய வளர்ச்சிக்கான நிலையான, மனித முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகும். இதனை அடைவதற்கான உங்களின் முயற்சிகள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்" என இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி போலீசார் கைது வாண்ட் உடன் சென்று கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தும் இந்த மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்புநாடுகளின் தலைவர்கள் விவாதிக்கின்றனர்.

    ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜிவா டெல்லி பாலம் விமான நிலையம் வந்திறங்கினார். அங்கு நடந்த ஒடிசா கிராமிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த கிறிஸ்டினா, தன்னை மறந்து அவர்களைப் போல் நடனமாடி மகிழ்ந்தார்.

    ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா நிச்சயம் ஆதரவளிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 

    ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். புது டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்கிறார். பிரதமர் இல்லத்தில் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற இருக்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க ஜனதா தளம் கட்சி முடிவு செய்து இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா அறிவித்து இருக்கிறார்.

    ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவகவுடா சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    ஜி20 மாநாட்டின்போது பிரதமர் மோடி அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 15 நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் பணிகள் நடைபெற்ற வருவதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில புலனாய்வு பிரிவு போலீசார், சுமார் 4200 பேரின் பட்டியலை சேகரித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 1990-ல் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வருபவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா என்பதும் ஒன்றுதான், பாரத் என்பதும் ஒன்றுதான் எனத் தெரிவித்த ப.சிதம்பரம், எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் பிரதமருக்கு கோபம் வந்துள்ளது. பாரத் பெயர் மாற்றம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மஹத், பியர்-ஹியுஸ் ஹெர்பெர்ட் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 6-2 என்ற செட்கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது.

    ×