என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து விஜயவாடா லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்து செல்லப்படுகிறார். வரும் 22ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.

    டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்ததாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் பிரேசில் டி20 மாநாட்டை நடத்த இருக்கிறது. இதற்கான தலைமையை பிரதமர் மோடி, பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார்.


    2021-ல் அலிஸா தன்னிடம் படித்த ஒரு 12-வயது முன்னாள் மாணவரிடம் தனது வீட்டில் பாலியல் அத்துமீறல் புரிந்தார். இது மட்டுமின்றி பல மாணவர்களிடம் தகாத பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார். பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி, முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்தார்.

    வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டையில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மணிப்பூர் மந்திரிசபையில், தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக மத்திய பாதுகாப்புப் படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "உறுப்பினர் நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்காக 300க்கும் மேற்பட்ட சந்திப்புகள நடந்தன. 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகளும் அவர்கள் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டு அதன் பிறகே இது சாத்தியமானது", என அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட ஆந்திர மாநில முன்னாள் முதல்வரிடம், சிஐடி போலீசார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக விஜயவாடா மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார். இதில் கோகோ காப் 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    கொழும்புவில் நேற்று நடந்த சூப்பர்4 சுற்றில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை சமர விக்ரமா அதிரடியால் 257 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 50 ரன் எடுத்தார். அடுத்து ஆடிய வங்காளதேசம் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த இரவு விருந்தில் பங்கேற்க வந்த பிரிட்டன் பிரதமரின் மனைவி அக்ஷிதா, ஜப்பான் பிரதமரின் மனைவி யுகோ கிஷிடா, ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டினா ஜார்ஜியா, மொரிசியஸ் பிரதமர் மனைவி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்பட பலர் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர்.

    ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை மாற்றுவேன் எனக் கூறினார். அவர் கூறியதபோல் இந்தியாவையே மாற்றி காட்டிவிட்டார். வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

    ஆப்பிரிக்கா யூனியனை ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்திய பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் முன்மொழிந்தார். அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க, அதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா யூனியன் நிரந்தர உறுப்பினர் ஆனது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதன் தலைவரை அவரது இருக்கையில் அமர வைத்தார்.

    பிரதமர் மோடி நின்று வரவேற்ற இடத்திற்கு பின்னால் ஒடிசா மாநில பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற சூரிய பகவான் கோவிலிலிருக்கும் கொனார்க் சக்கரத்தின் பிரதி அமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் 13-ஆம் நூற்றாண்டில் ஒன்றாம் நரசிம்மதேவன் மன்னரால் இந்த சக்கரம் உருவாக்கப்பட்டது. ஒடிசாவின் சூரியபகவான் கோவிலில் உள்ள இச்சக்கரம், பண்டைய இந்தியர்களின் அறிவாற்றலையும், முன்னேறிய நாகரிக வளர்ச்சியையும், கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் அவர்களுக்கிருந்த நுண்ணறிவையும் பறைசாற்றும் விதமாக இருப்பதாக உலகம் முழுவதும் புகழ் பெற்றது.

    ×