என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, திருச்சி உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், இன்று காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது. அப்போது கர்நாடக அரசு மீது புகார் கூற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேவேளையில், தண்ணீர் திறந்து விட போதுமான நீர் அணைகளில் இல்லை எனத் தெரிவிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    "சனாதன தர்மம் எப்போதும், யாருக்கும் எதிரி கிடையாது. இதனால் தான், நாமாக வேறு நாட்டிற்கு போர் தொடுக்காமல் இருக்கிறோம். சனாதன தர்மம் யாருக்கும் எதிரான தர்மம் கிடையாது. இதற்கு ஆதியும் கிடையாது, முடிவும் கிடையாது எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய தர்மம்," என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்திருந்தார்.

    ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

    "பனிப்போர் காலத்தை கடந்து நாம் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு ஒரு நிலையான, வளரக்கூடிய பொருளாதார தளத்தை அமைத்து கொள்வதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுக்கிறோம். சர்வதேச சமூகத்தில் வியட்னாம் ஒரு நட்பான, நம்பிக்கையான மற்றும் பொறுப்புள்ள கூட்டாளி. சீனாவை கட்டுப்படுத்தவோ, தனிமைப்படுத்தவோ அமெரிக்கா விரும்பவில்லை," என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

    2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க ராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களை கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

    9/11 தாக்குதல் எனப்படும் இந்த நாச வேலையினால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    சீமான் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பபட்டது. இதன்படி இன்று காலை ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷிய வீரர் மெத்வதேவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஆசிய கோப்பை தொடர், சூப்பர் 4 சுற்று பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 24.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழைபெய்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

    ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனடா பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×