என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனை சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

    சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா, ''நான் சனாதனத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எதிர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் எதிர்க்கிறேன். இதுபோன்ற கருத்துகளை கூறக் கூடாது. எந்தவொரு மதத்திற்கு எதிராகவும், இதுபோன்ற கருத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அனைத்து மதத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

    சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது INDIA கூட்டணியின் கருத்து என்று அர்த்தம் இல்லை. நாடு எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றிற்கு எதிராக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து மாநிலத்தின் மாவட்டத்தில் இருந்து சிறிய தலைவரால் உருவானது. இது கூட்டணியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    கோழிக்கோட்டில் பதிவான இரு மரணங்களை மாநில அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

    சென்னையில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், வனத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 3, 4-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் வளர்ச்சிப் பாதைக்காக அறிவித்த திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு, மாவட்ட நிர்வாகம் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இலங்கை 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 41 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.  

    12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் குறித்த தகவல் இடம்பெற்று இருப்பது குறித்து பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்த எக்ஸ் பதிவில் அவர், "தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வகுப்பில் சேர்ந்து கொண்டு அறிவாளியாகும் படி நாங்கள் பி.கே. சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டு உள்ளார்.

    கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தி இருக்கிறார். 

    "சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என கஜேந்திர சிங் தெரிவித்தார்.

    நவீன இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முன்னணி வணிக தலைவர்களுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்தது. இதில் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல், இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும், அடுத்த வருடம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பின்னணியில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அவரது கருத்துக்களை வெளியிட்டதாக எரிக் கூறினார்.

    மணிப்பூரில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு, கிராமத்திற்குள் நுழைந்து மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். மூன்று பேரும் குகி-சோ பிரிவினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக மாநில அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என, கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை மந்திரியுமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    ×