என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் 18-ந்தேதி 75 ஆண்டு பாராளுமன்றத்தின் அனுபவம், கற்றுக்கொண்டவை, சாதனைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மெக்சிகோவில் ஏலியன்ஸ் கண்காட்சியை நடத்தி அந்நாட்டு அரசு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. இவை குறைந்தது 1,000 ஆண்டு பழமையானவை என கூறப்படுகிறது.

    லிபியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5300-ஐ தாண்டியது. மேலும், 10,000 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இந்த இக்கட்டான நேரத்தில் லிபியா மக்களுக்கு துணை நிற்போம் என்றார்.

    கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு ஏற்கப்படத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திக சிங் ஷெகாவத் சனாதன தர்மம் பற்றி பேசிய கருத்துக்கு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

    "சனாதன தர்மத்தில் இருப்பவர்கள் பொதுவாக ஹிம்சையை எதிர்த்து, அஹிம்சையின் பக்கம் இருப்பவர்கள். யாரும் அப்படி பேசுவதற்கு உரிமை இல்லை , யாராவது உணர்ச்சியில் அப்படி பேசினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். யாரும் பேசக் கூடாது."

    "இந்த மதம் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரையும் அரவணைத்ததால், தான் இந்தியா இன்று இப்படிப்பட்ட நாடாக இருக்கிறது. யார் சொல்லி இருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்து அப்படி சொல்லி இருந்தாலும் கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது தவறான அர்த்தத்தை கொடுக்கும். யார் சொல்லி இருந்தாலும், இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது," என்று பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். 

    தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கேரள மாநிலத்தின் அண்டை மாவட்டங்களாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

    காவிரியில் இருந்து கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட மறுத்து வரும் நிலையில், கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    ஓட்டல் அதிகாரிகள், சீன குழுவினரிடம் அவர்களது பைகளை "ஸ்கேனர்" கருவி ஆய்வுக்கு தருமாறு கோரிக்கை வைத்தனர். அந்த பைகளை வழக்கமான தூதரக பணிக்கான பைகள் என கூறி சீன குழுவினர் தர மறுத்தனர். சுமார் 12 மணி நேரம் அவர்களின் அறைக்கு வெளியே ஓட்டல் பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.

    பொருளாதார வளர்ச்சிக்கான வெற்றி பெறும் வழிமுறைகளை ரஷியா இந்தியாவை போல கையாள வேண்டும். இந்தியர்கள் இந்தியாவிலேயே அதிகளவில் வாகனங்களை உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மிக சரியான வழிமுறை. மோடி மிக சரியானதைத்தான் செய்கிறார் என புதின் கூறினார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அதாவது ஜனவரி 11-ந்தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும், ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்ய நாளையும் (14-ந்தேதி), ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய 15-ந்தேதியும், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்பவர்கள் 16-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

    ×