என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பிறப்பு சான்றிதழை அக்டோபர் 1-ம் தேதி முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, அசோக் நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் நகரில் குளிர்ச்சியான சூழல் உருவாகி இருக்கிறது.

    மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர். 

    சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவழியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக அவர் இன்று பதவியேற்றார். 

    விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்கு 2-வது முறையாகவும் ஆஜராக முடியாது என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் போலீசார் நேரடியாக சம்மன் வழங்க சென்றபோது, சீமான் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணி சில தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. விரைவில் அதற்கான பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அது உறுதியானதும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் (impeachment) எனப்படும்.

    பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) அந்நாட்டில் இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார்.

    சனாதன தர்மம் குறித்து அமைச்சர்களும், கட்சி தலைவர்களும் பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நிலங்களில் ஆடுகள் புல் மேய்வது தொடர்பான விஷயங்களில் இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பதுண்டு. வாக்குவாதம் சண்டையாக மாறியது. இதனையடுத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அது வன்முறையாக மாறியதில் இரு பிரிவினரிடையே துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள், அதனை வெளியில் எடுத்து சுட்டனர்.

    காசா முனையில் குண்டு வெடிப்பில் ஐந்து பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. போராட்டக்காரர்கள் குண்டுகளை தவறாக கையாண்டதன் காரணமாக குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது என் கூறி அதற்கான படங்களையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் மீது பாலஸ்தீன ராணுவம் எடுத்த நடவடிக்கையில் 25 பேர் காயம் அடைந்தனர்.

    இஸ்ரேல் சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    ×