என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி படித்து வந்த கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்ததாகவும், அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடைய 30 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார். சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடம் இருந்தும் கிடைக்கவில்லை. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்காளதேசம் 265 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா சுப்மன் கில் சதமடிக்க, 259 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.

    சென்னை தாம்பரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக வரும். அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக வேண்டும். தற்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என்றார்.

    வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பத்திரிகையார்களை சந்தித்தார். அப்போது, ''குருவி வெடி, லெட்சுமி வெடி போன்று இரண்டு வெடிகளை வைத்து மலையை தகர்க்கலாம் என நினைக்கிறார்கள். தற்போது இரண்டு முறை சம்மன் அனுப்பிய காவல்துறை அப்போது என்ன செய்தது? எல்லா வினைகளுக்கும் எதிர்வினை உண்டு.

    வீரலட்சுமி என்பது யார்? என்மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை காவல்துறையும் கேட்கவில்லை, பத்திரிகையாளர்களும் கேட்கவில்லை. ஜூனியர் நடிகைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து செட்டில்மென்ட் செய்ததாக கூறியுள்ளார். அந்த ஜூனியர் நடிகை யார் தெரியுமா? வீரலட்சுமிதான்'' என ஆவேசமாக பதில் அளித்தார்

    தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்ற விவகாரத்தில் சரத் பவார், அஜித் பவார் தரப்பு பிரதிநிதிகளை அக்டோபர் 6-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மணிப்பூர் வன்முறையில் 175 பேர் உயிரிழந்துள்ள நிலையிலா், 5,172 தீவைப்பு சம்பங்கள் நடைபெற்றுள்ளன. 254 கிறிஸ்தவ ஆலயங்கள், 132 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    கருட சேவையின் போது 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ஆயிரம் பெறுவதற்கு தகுதிப் பெற்றவர்களுக்கு, நேற்று முதல் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பணம் பெற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டு வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் 1000 ரூபாய் கிடைக்கப் பெற்றது குறித்து கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் கிடைத்ததில் ரொம்ப ரெம்ப மகிழ்ச்சி. முதலமைச்சர் பெண்களுக்காக இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை. முதலமைச்சர் கொடுப்பது தாய் வீட்டு சீர் போன்று உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி, வாழ்த்துக்கள். ஹேப்பி முதலமைச்சர் சார்... என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்து, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    ×