என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். கடந்த மே மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை என்பதால் இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் ரூ.79 கோடியே 90 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

    அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாரதப்பிரதமர் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து நீண்ட நெடுங்காலம் பாரத தேசத்தையும், பாரத மக்களையும் வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக கோப்பையை வெல்லுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடந்தது. ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார். செக் குடியரசின் ஜாகுப் வால்டிச் முதல் இடம் பிடித்தார். பின்லாந்து வீரர் ஹாலெண்டர் 3ம் இடம் பிடித்தார்.

    சென்னையில் நடந்த கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90-வது ஆண்டுவிழாவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தேர்தலுக்காக சனாதன எதிர்ப்பு கருத்துகளை எதிர்க் கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோயிலின் உண்டியல் பணம் மட்டும் தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு வேண்டுமா என்றார்.

    பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், "முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்" (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.

    கொடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனுவில், ரூ. 1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருக்கும் மனு செப்டம்பர் 19-ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீர் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் மழையால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    "யஷோபூமி" என பெயரிடப்பட்டுள்ள இம்மையம் "மைஸ்" எனப்படும் சந்திப்புகள், ஊக்கங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (Meetings, Incentives, Conferences, and Exhibitions) ஆகிய நோக்கங்களுக்கான மையமாக 8.9 லட்சம் சதுர மீட்டர் திட்ட மதிப்பீட்டில், 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பில் அமையவுள்ளது.

    "கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பவர்களின் விகிதாசாரம் 3 சதவீதம் எனும் அளவில் இருந்தது. ஆனால் நிபா தொற்றின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறப்பு சதவீதம் 70 வரை இருக்கும். இந்தியா நிபா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தலைமை பொறுப்பிலுள்ள டாக்டர். ராஜிவ் பால் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி, அதன் சொந்த நலனுக்காக உண்மையிலேயே யாரையாவது புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால், அவருடைய பெயர் ராகுல் காந்தி. உங்களுடைய தலைவருக்கு வலிமை இல்லை. நீங்கள் யாரையெல்லாம் புறக்கணிப்பீர்கள்?. புறக்கணித்து, முன்னேற வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய தலைவரை புறக்கணியுங்கள் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்

    ×