என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில், சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எதற்காக நிராகரிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் இன்றும் மெசேஜ் மூலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தநிலையில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லீவிங் செய்து விபத்தில் சிக்கிய பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பாராளுமன்ற சிறப்பு பொதுக்கூட்டம் இன்று தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. நாளை முதல் 22-ம் தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இறுதிப்போட்டியில் இளவேனில் வாலறிவன், 252.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

    ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை 50 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 51 ரன்கள் எடுத்து வென்று, சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்ட நாயகனாக தேர்வான முகமது சிராஜ், தனக்கு அளித்த பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு அளிப்பதாக அறிவித்தார்.

    ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதியில், இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிப்பெற்றது. இதன்மூலம், இந்திய அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

    ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    "எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் ரஷிய பெண் கூறினார்.

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இப்புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    "ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர்; அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை" என ஒரு பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

    ×