என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமசந்திரன், உள்ளிட்ட அமைச்சர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி-நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். கர்நாடகாவில் கிட்டத்தட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருக்கிறது. கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று பழைய கட்டிடத்தில் விவாதம் நடைபெற்றது. இன்று முதல் புது கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது. மதியம் ஒரு மணியளவில் புதிய கட்டிடத்தில் இரு அவைகளும் தொடங்க இருக்கின்றன.

    இந்த நிலையில் 10 மணியளவில் பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகம் வந்தார். இரு அவைகளின் உறுப்பினர்களும் பாராளுமன்றம் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

    ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார். பவன் கல்யாண் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி அடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாண் ஒப்பிட முடியாது.

    பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை. பிறருக்காக வேலை செய்யும் ஒரு பேக்கேஜ் ஸ்டார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் போருக்கு தயார் என பவன் கல்யாண் தெரிவித்து இருக்கிறார். போர்க்களத்தில் நுழையும் அளவுக்கு அவரிடம் அவ்வளவு இராணுவ வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தது. இந்த சந்திப்பின்போது, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த அறிவுறுத்தினர்.

    கனடாவில் ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய கனடா, இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற்றியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முதல் 2 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். ரோகித் சர்மா, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    "நான் பணிவுடன் இந்த வெற்றியை ஏற்கிறேன். எனக்கு இது உண்மையிலேயே பெருமையான விஷயம். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் நாட்டின் அழகை உலகிற்கு பறைசாற்றுவேன்" என இந்த வெற்றியை குறித்து எரிகா ராபின் தெரிவித்தார்.


    காரில் இருந்த நண்பன் அந்த அதிகாரி தரையில் பரிதாபமாக கிடப்பதை படமாக்கி கொண்டான். காரில் உள்ள மற்றொரு நண்பன், "அவன் தொலைந்தான்" என கூற, அவர்கள் அங்கிருந்து விரைவாக தப்பி செல்கின்றனர்.

    பாராளுமன்ற ஐந்து நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அவைக்கு வருகை தந்துள்ளனர்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ×