என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பெரு நாட்டில் நேற்று தொடங்கி 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் எல் நினோ நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் அதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

    பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும். சுமார் 660 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரெயில் 8 மணி நேரத்தில் அடையும். இதில் 1 பெட்டி வி.ஐ.பி.களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    ஐ.நா. கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ''ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான்'' என உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.

    நியூசிலாந்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 11 கிலோ மீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்தியாவுக்கு இதில் தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இந்நிலையில், கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அத்தியாவசிய தேவையின்றி ஜம்மு காஷ்மீர் பயணத்தை தமது நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்றது.

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டிஜெனீரோவில் நடந்தது. பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளி வென்றார். அவர் தனது முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்றுள்ளார்.

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர் என தகவல் வெளியாகியது. டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் அவர்கள் ஆலோசிக்கின்றனர். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளனர்.

    2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 5-ந்தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதே போல உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதல் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஜே.இ.இ. முதல் தேர்வு ஜனவரி மாதம் 24-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜே.இ.இ. 2-ம் தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்த வயதுள்ளவர்கள் அவர்களது வாழ்நாளில் இனிமேல்தான் சிறப்பான நாட்களை எதிர்கொள்ள போகிறார்கள். எனவே, தனது வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும்.

    புதிய கட்டிடத்தில் இன்று மதியம் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி எம்.பி.க்களுடன் பழைய கட்டிடத்தில் இருந்து நடந்து வந்தார். ஓம் பிர்லா அவரை வரவேற்றார். பின்னர் எம்.பி.க்கள் அவர்களது இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய பிறகு, பிரதமர் மோடி புதிய கட்டிடத்தில் முதல் முறையாக பேசினார்.

    நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையில் 103 போர் விமானங்களை கொண்டு போர் பயிற்சியை தைவானின் வான் பகுதியில் சீனா மேற்கொண்டது. நேற்றிலிருந்து இன்று வரை சீனா மேலும் 55 போர் விமானங்களின் பயிற்சியை மேற்கொண்டதுடன் தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் 7 போர்கப்பல்களை கொண்டு பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்டது.

    ×