என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சென்னை பெருங்குடி மண்டலத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சாலை பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் பணிகளின் தற்போதைய நிலையை கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்ற தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி நீர் கிடைக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் ''நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கட்ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதன் மூலம் நீட் தேர்வு தேவையற்றது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான தேர்வாக மாறிவிட்டது. நீட் தேர்வு மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1ல் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    454 உறுப்பினர்கள் ஆதரவுடன் மக்களவையில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். அது நானும், என்னுடைய கட்சியின் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர்தான் என ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

    நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.

    நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பாராளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் 454 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிராகவும் பதிவாகி உள்ளன.

    மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தின் போது, "பெண்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டாம், அவர்களை கொண்டாட வேண்டாம். பெண்களை சமமாக நடக்க அனுமதியுங்கள். எங்களை தாய் என்றோ சகோதரி என்றோ மனைவி என்றோ அழைக்க வேண்டாம். எங்களையும் சமமாக நினைத்து, மரியாதை அளித்தாலே போதுமானது," என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

    கனடாவில் வாழும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. "இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாலும், கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் கனடா செல்ல திட்டமிட்டு இருக்கும் பயணிகளும் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

    நகர வீதிகளில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என 44 சதவீதம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெறும் ஆபாச படங்களும் செய்திகளும் தங்களை பாதிப்பதாகவும் கூறினர்.

    ×