என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்ற வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இதுகுறித்து எடுக்கப்பட்ட முடிவு குறித்து கடிதம் மூலம் விளக்கம் அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நீரை வைத்துக் கொண்டு குறுவை பாசனத்தை பழுது இல்லாமல் காப்பற்றலாம் என கருதுகிறோம். தண்ணீர் திறந்து விட்டதும் தமிழகம் வந்துவிடாது. பிலிகுண்டுலு வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பிற்கு ஆளாகும். அந்த நிலைக்கு போகமாட்டார்கள் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு ரஷியா தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் உள்நாட்டில் எரிபொருள் விலை 4 சதவீதம் குறைந்துள்ளது. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த ரஷியா இந்த முடிவை எடுத்துள்ளது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா செல்கிறார். கனடா செல்லும் அவர், அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செர்பியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடந்தது. 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், ஸ்வீடன் வீராங்கனை ஜோனா மால்கிரேனுடன் மோதினார். இதில் 16-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, வெண்கலம் பெற்ற அவர், பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியுடன் உரையாடியபோது என் கவலைகளைப் பகிர்ந்து கொண்டேன். இந்த விவகாரத்தில் முழு வெளிப்படை தன்மையை வெளிப்படுத்த இணைந்து பணியாற்றும்படி இந்திய அரசை கேட்டுக் கொண்டேன் என்றார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதேபோல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் ஏழு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கு திட்ட விதிமுறைகளின்படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 560 கோடி ரூபாய் சுமார் 6 லட்சம் தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி (Mateusz Morawiecki), உள்நாட்டு ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    என்னை பொறுத்தவரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம் என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை 22-ந்தேதியும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய வழங்கப்படும் "விசா" எனப்படும் உள்நுழையும் அனுமதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க விசா சேவை மையங்களுக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ×