ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு வெளியான ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும், இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.