என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதமடித்து அசத்தினர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 200 ரன்கள் குவித்தது.

    உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கும், தானியங்கி துப்பாக்கிகளை கையாளுவதற்கும், பிரித்து கோர்ப்பதற்கும் கைதேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை மற்றும் தொப்பி ஆகியவற்றை தைத்து தரவும் பயிற்சிகள் நடக்கிறது.

    ஆசிய விளையாட்டு போட்டியின் 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கலம் வென்றது. துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர், தினத்தந்தி குழும நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.

    ஹர்திப் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பதற்கான ஆதாரங்கள் ஃபை ஐஸ் அமைப்பின் மூலம் கனடாவிற்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக கனடா மற்றும் அமெரிக்காவிற்கிடையே பல உரையாடல்கள் நடைபெற்றதாகவும் கனடாவிற்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹென் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும் விவகாரத்தில், கர்நாடக அரசு காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தவறி விட்டது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் இடையூறு ஏற்பட்டது. மர்ம நபர் ஒருவர் பிரமதர் நரேந்திர மோடியின் கான்வாய் இடைமறித்து ஓடியதால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பிரதமர் மோடியின் கான்வாய் வாரணாசியின் ருத்ராக்ஷ் செண்டர் வந்த போது, இந்த சம்பவம் அரங்கேறியது.

    உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.

    சென்னை, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

    டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றது. என்.எஸ்.யு.ஐ. அமைப்பை சேர்ந்தவர் துணை தலைவர் பதவியை வென்று இருக்கிறார்.

    ×