என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டாலும், முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    பாஜக- அதிமுக பிரிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க.-வை போன்றே தமிழக பா.ஜ.க.வினரும் அ.தி.மு.க. விலகலை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனின் சில பகுதிகள் ரஷிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷியா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது பா.ஜ.க. உடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார்.

    பிரபலமான டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 183 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட்டுள்ள இத்திருக்கோவிலை கட்டி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆனது.

    தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். 

    ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 35 அடியை எட்டிவிடும் என்பதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் எனவும், கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஆஜரானார். முன்னதாக அவர் விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கிருஷ்ணகிரி அரசு மாணவர் விடுதி வார்டன் முருகன் என்பவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    தமிழ்நாட்டில் நெல்லை-சென்னை வழித்தடம் உள்பட மொத்தம் 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் 9 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் ரெயில்களில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர் என்றார்.

    ×