என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சத்தியமூர்த்தி பவனில் நடந்த சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்றினார். அப்போது அவர் பேசுகையில், சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை ஒருமுறைக்கு இருமுறை அனுப்பியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு அதிகாரம் இல்லை. இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அவர் கைது செய்யப்படலாம். இதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.

    பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆன்மீக தலைவரான மொராரி பாபு ராம கதை நிகழ்த்தி வருகிறார். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி 20-ம் தேதியுடன் முடிகிறது. இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என தெரிவித்தார்.

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.

    தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

    நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று இந்திய குடியரசு தலைவர் அளிக்கும் தேநீர் விருந்தில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது துணைவர் சுதேஷ் தன்கர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    திருமலைக்கு நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. 

    பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு மிகவும் பிரபலம்.

    இந்நிலையில், 77-வது சுதந்திர தினத்தன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். வழக்கமான கொடியிறக்க நிகழ்வோடு, கலை நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

    நாம் நமது தேசிய அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும். 2047-இல் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

    செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ''என்னுடைய 2-வது பிரதமர் பதவி காலத்தில் 10-வது முறையாக உரையாற்றியுள்ளேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை, அடுத்த வருடமும் இதே இடத்தில் மக்களிடம் பட்டியலிடுவேன்'' எனத் தெரிவித்தார். இதன்மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை அடுத்த வருடம் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வருடம் அவரது வீட்டில் கொடியேற்றுவார்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

    அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை டெல்லி செங்கோட்டையில் இருந்து பட்டியலிடுவேன் எனக் கூறினார்.

    பிரதமர் மோடியின் 10 ஆண்டு பிரதமர் பதவி அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இது அவரது 10-வது சுதந்திர தின உரையாகும். அடுத்த முறையும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே செங்கோட்டையில் கொடியேற்ற முடியும். அந்த வகையில்தான் மீண்டும் பிரதமராகி கொடியேற்றுவேன் என்பதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.

    பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:-

    * இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது.

    * வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களில் கூட டிஜிடடல் வளர்ச்சி உள்ளது.

    * நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான திறன் நம்மிடம் உள்ளது.

    * சிறிய நகரங்களின் இளைஞர்கள் கூட தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என காட்டியுள்ளனர்.

    * உலகளவில் முன்பிருந்த நிலைமைகள் மாறிவிட்டன.

    * நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சமமாக வளர்ச்சியடைவதே சரியான முன்னேற்றம்

    * அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு

    * புதிய இந்தியா தடுக்க முடியாதது, வெல்ல முடியாதது.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 5,300 கன அடியில் இருந்து 9,300 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியதன் எதிரொலியாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×