என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர துணை ஆணையர் அரவிந்த், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு உள்ளிட்ட 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    மணிப்பூரில், "பிரிவினைவாத, தேசவிரோத, வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல்களை" ஊக்குவிக்கும் எந்தவொரு சமூகவலைதள குழுக்களில் இருந்தும் வெளியேறுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    77-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி, உரையாற்றுகிறார். சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். வன்முறையை தொடர்ந்து இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில் இண்டு வாரங்கள் கழித்து தற்போது இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

    உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் ரஷியா நடத்திய கொத்துக் குண்டு தாக்குதலில் 23 நாட்களே ஆன குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

    நீட் தேர்வு எனும் பலி பீடத்தில் பலியானவர்கள் பட்டியலில், ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிக கொடூரமான நிகழ்வு. மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; எந்த சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம். மாணவர்கள் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வை நீக்க சட்ட ரீதியான முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது என்று மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 5-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன் அதிரடியால் 2 விக்கெட்டுக்கு 171 ரன்களை எடுத்து வென்று, டி20 தொடரை 3-2 என கைப்பற்றி அசத்தியது.

    சென்னை மற்றும் புறநகரில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான அம்பத்துார், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீசன் (வயது 19), தற்கொலை செய்துகொண்டார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஜெகதீஸ்வரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பல்வேறு துறைகளுக்கான தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், கோவை எஸ்பி (புறநகர்) பத்ரிநாராயணன் உள்ளிட்டோருக்கு நல்லாளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சுதந்திர தினத்தன்று ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

    மணிப்பூர் பிரச்சினை பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை என்று திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.

    கனடாவில் நேற்றிரவு காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கோவில் கதவில் காலிஸ்தான் தலைவர் குறித்த போஸ்டரையும் ஒட்டிச்சென்றுள்ளனர். இது இந்த வருடத்தில் 3-வது முறையாக இந்து கோவில் மீது தாக்கப்படும் சம்பவம் ஆகும்.

    ×