என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான அரசு, ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் தொடர்பாக பிரியங்கா காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய பிரதேச மாநில அரசை விமர்சனம் செய்திருந்தார். இதனால் பா.ஜனதா தரப்பில் பிரியங்கா காந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    1989-ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் நடைபெறவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், ஒத்திகை பார்த்து ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகம் எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் உண்மைதான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறான தகவலை, பொய்யான தகவலை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிட்டிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத்தில் மக்கள் இதற்கு தகுந்த பாடத்தை புகுட்டுவார்கள்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 7-ந்தேதி முதல் விசாரணை நடத்திய நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 16-ந்தேதி ஜாமின் மனு தாக்கல் செய்யவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் விரைந்து விசாரணையை முடிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

    பனையூரில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அரசு உதவியுடன் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உலகத்தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என பதிவிட்டார். மாநாடு, கண்காட்சிகளை நடத்தும் வகையில் விரைவில் ஈசிஆரில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடியால் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. முதல் பாதியில் மலேசியா 3-1 என முன்னிலை பெற்றது. 2-வது பாதியில் இந்தியா கோல் மழை பொழிந்தது. இறுதியில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போட மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கிவிடும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

    மகளிர் உரிமைத்தொகைக்காக இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. தமிழகத்திற்கு தரவேண்டிய 37.9 டிஎம்சி தண்ணீரை தரவேண்டும் என வலியுறுத்தியதால், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியில் இந்தியா கோல் மழை பொழிந்தது. இறுதியில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர், ஆசிரியர் என நாம் அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்சனை இது. சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை. சின்னதுரை மற்றும் அவரது சகோதரி விரைந்து குணமடைந்து நலம் பெற விழைகிறேன் எனவும் கனிமொழி கூறியுள்ளார்.

    ×