என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படுவது போன்று 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களின் சேவை இன்று மட்டும் இரவு 10.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே மெட்ரோ ரெயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தென்அமெரிக்கா நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட பெர்னாண்டோ வில்லிவிசென்சியோ பிரசாரத்தின்போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 வெளிநாட்டினர் கைது செய்து செய்யப்பட்டுள்ளர். அவர்கள் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்தில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடித்திருந்தன. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் மேலும் ஒரு கோல் அடிக்க 2-1 என நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலுக்கு 32 பவுன் (256 கிராம்) எடையுள்ள தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். அதன் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும். இதேபோல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார்.

    துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் பீதியில் உறைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. வண்டலூரில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலும், ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. தற்போது 99 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 2வது வாரத்தில் இந்த பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்றார்.

    மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. 3 நாட்களாக நீடித்த இந்த விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு நல்ல சகுனமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இதனால் பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதினார். அவரது பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×