என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது பாதியிலும் 2 கோல் அடித்தது. இறுதியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் 2 காரில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பிறகு அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் 21 பேர் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி தங்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். அவையில் பெண் உறுப்பினர்களின் கண்ணியத்தை அவமதித்தது மட்டுமல்லாமல், அவையின் கண்ணியத்தை குறைத்த ராகுல் காந்தியின் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதத்தில் கூறி உள்ளனர். 

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு செப்டம்பரில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த யாத்திரை ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இந்நிலையில், குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் காந்தி மீண்டும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வயநாடு செல்கிறார். வரும் 12, 13-ந்தேதிகளில் வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். லோக்சபா எம்.பி.யாக மீண்டும் பதவியேற்ற பிறகு, ராகுல் காந்தி செல்வது இதுவே முதல் முறையாகும்.

    செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்துள்ள வழக்கில், 3 மாதம் அவகாசம் வழங்க முடியாது என்றும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்குள் முடிக்காவிட்டால் சிறப்பு புலனாய்வு விசாரணை உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

    எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் "வீராவேசம்" செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் கொரியா அணிகள் இன்று மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்ற அரையிறுதிக்கு முன்னேறியது.

    மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது. இந்நிலையில், டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நிறைவேற்றப்பட்டது.

    ×