என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, இன்று இரவு புழல் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர். அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து நாளை காலை முதல் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றார்.

    அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பியாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அமைதி பேரணியாக சென்று, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. மணிப்பூரில் பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரியாக பிரேன் சிங் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூரில் ஆளும் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. இதனால் மணிப்பூர் அரசுக்கு ஆபத்து இல்லை என தெரிகிறது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது. முதல் பாதியின் 18-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது பாதியிலும் 4 கோல் அடித்தது. இறுதியில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலம் எடுத்த நிலவின் முதல் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு சர்வதேச மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர் என்றும், மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ₨1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் கூறினார். மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ₨3.42 கோடி வசூலானது என்று கூறிய அவர், இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என்றார்.

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்தது. நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிச்சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியவீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

    ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவுவு அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார். இதில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ×