என் மலர்
வட கொரியா
- வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
- தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது.
உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த ஆண்டு மட்டும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி உள்ளது.
கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியும் சோதனை நடத்தியது. இதுவரை மொத்தம் 38 முறை இந்த சோதனை நடந்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று வடகொரியா 3 குறுகிய அளவிலான பாலிடிக்ஸ் ஏவுகணை ஏவி சோதணை மேற்கொண்டதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. தெற்கு பினாங் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து சென்றது .
இதேபோல் தென்கொரியா வான்வெளி பரப்பில் 5 டிரோன் விமானங்களை வடகொரியா பறக்கவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஒரு டிரோன் விமானம் தெற்கு சியோல் பகுதியில் பறந்தது. இதையடுத்து தென்கொரியா போர் விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்கள் அந்த டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது டிரோன் விமானங்களை அனுப்பி வடகொரியா அச்சுறுத்தி இருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவாகி உள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென் கொரியா அதிபர் யூன்-சுக் யோல் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வடகொரியாவின் ஏவுகணை சோதனையை தொடர்ந்து சகிக்க முடியாது. இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்கள் எப்போதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வடகொரியா உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
- குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,
பியாங்யாங்:
சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.
இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.
- கடைசியாக கடந்த மாதம் 19-ந் தேதி ஐசிபிஎம் ஏவுகணையை சோதித்தது.
- கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சியோல் :
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த மாதம் 19-ந் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய 'ஹவாசோங்-17' என்கிற ஐசிபிஎம் ஏவுகணையை வடகொரியா சோதித்தது. அதன் பிறகு எந்தவொரு ஏவுகணை சோதனையையும் வடகொரியா நடத்தவில்லை.
இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்தது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவி சோதித்ததாகவும், அந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையில் கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து ஜப்பான் துணை ராணுவ மந்திரி தோஷிரோ கூறுகையில், "வடகொரியாவின் ஏவுகணைகள் 550 கிமீ உயரத்தில் 250 கிமீ தூரம் வரை பறந்ததாகவும், அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகவும் தெரிகிறது. ஏவுகணைகளால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை" என கூறினார். ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
- வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார்.
- தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சியோல்:
வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.
அரசு அனுமதித்த இணைய தளங்களை மட்டுமே பார்க்க முடியும். அரசின் விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன.
இதனால் வெளி உலக தொடர்பு இல்லாமல் அந்நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர். ஆனாலும் அதையும் மீறி தென் கொரியா நாட்டில் இருந்து பிளாஸ்டிரைவ் போன்ற கருவிகள் வடகொரியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. தென்கொரியா நாடகங்களுக்கு வடகொரியாவில் நல்ல மவுசு உள்ளது. இதனால் ரகசியமாக விற்பனை செய்யப்படும் சி.டி.க்களை வாங்கி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் அமர்ந்து அந்த நாடகங்களை பார்ப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ரியாய்சங் என்ற மாகாணத்தில் 16 மற்றும்,17 வயது பள்ளி சிறுவர்கள் 2 பேர் சட்ட விரோதமாக தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா ராணுவத்தினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி சம்பவத்தன்று 2 சிறுவர்களும் பொது மக்கள் முன்னிலையில் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா சமீபகாலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஏதும் அறியாத 2 பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
- 'ஹவாசோங்-17' ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம்.
- ராணுவ வீரர்களுடனான சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்தார்.
பியாங்யாங் :
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேற்று 'ஹவாசோங்-17' என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஆய்வு செய்து, பின்னர் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் அன்னின் மகள் உடன் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கிம் தனது மகளை முதல் முறையாக வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கிம் தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்டார். தற்போது மீண்டும் ராணுவ வீரர்களுடனான முக்கிய சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்தது கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம், "உலகின் மிகவும் வலிமை மிக்க அணு சக்தியைக் கொண்டிருப்பதே வடகொரியாவின் இறுதி இலக்கு. அது இந்த நூற்றாண்டின் முன்னோடியில்லாத முழுமையான அணுசக்தியாக இருக்கும். 'ஹவாசோங்-17' ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம். இது வட கொரியாவின் உறுதியையும், உலகின் வலிமையான ராணுவத்தை உருவாக்குவதற்கான திறனையும் நிரூபித்தது" என கூறினார்.
- அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.
- வடகொரியா தொடர்ந்து பல ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.
சியோல் :
வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராப்பகை உள்ளது. இதற்கிடையே அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்பட பல ஏவுகணைகளைத் தொடர்ந்து ஏவி சோதித்து வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத்தடைகளை விதிக்க பரிசீலிப்பதாக தென்கொரியா அறிவித்தது.
இதுதொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறுகையில், "வடகொரியாவின் ஆயுதத்திட்டத்துக்கான புதிய நிதி ஆதாரமாக அமைந்துள்ள இணையவழி தாக்குதல்களுக்கு பதிலடி தருகிற விதத்திலும், அந்த நாடு அணு ஆயுத சோதனை போன்ற பெரிய ஆத்திரமூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டால் பொருளாதார தடைகளையும், பிற தடைகளையும் விதிக்க பரிசீலிப்போம்" என தெரிவித்தது.
இந்த அறிக்கை, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அவரது வாரிசுமாக கருதப்படுகிற அதிகாரம் வாய்ந்த கிம் யோ ஜாங், தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கிற வகையில் ஒரு ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கூறி இருப்பதாவது:-
அமெரிக்கா கொடுத்த எலும்பைக் கடித்துக்கொண்டு ஓடும் காட்டு நாயை விட மோசமான தென் கொரியா, வட கொரியா மீது என்ன தடைகளை விதிக்கப்போகிறது என்று ஆச்சரியப்படுகிறேன். என்ன, ஒரு அற்புதமான காட்சி....
எங்கள் மீதான அமெரிக்கா மற்றும் அதன் தென்கொரிய கூலிகளின் அவநம்பிக்கையான தடைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள், தென்கொரியா மீதான விரோதத்துக்கும், கோபத்துக்கும் எண்ணெய் ஊற்றுவது போலாகும். மேலும் அது அவர்களுக்கு ஒரு கயிறாக இருக்கும் என்று முட்டாள்தனமான முட்டாள்களை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வட கொரியாவின, அணு ஆயுதத்திட்டம் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கருதி, அந்த நாட்டைச் சேர்ந்த 15 தனி நபர்கள் மீதும், 16 அமைப்புகள் மீதும் தென்கொரியா சமீபத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்தது நினைவுகூரத்தக்கது.
- ஏவுகணை சோதனைக்கு நடத்திய வடகொரியாவுக்கு ஐநா.சபை கண்டனம் தெரிவித்தது.
- ஐ.நா.இழிவான அணுகுமுறையை மேற் கொண்டுள்ளதாக வடகொரியா கருத்து.
பியோங்யாங்:
தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு நடத்திய வடகொரியாவுக்கு ஐநா.சபை கண்டனம் தெரிவித்தது.
எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்வதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தமது அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வட கொரியா வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சாசனத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகள் உள்பட அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் சமத்துவத்தைப் பேணுவதே சரியான பணி என்று கூறியுள்ளார்.
ஆனால் அவற்றை புறக்கணித்து, ஐ.நா.பொதுச்செயலாளர் மிகவும் இழிவான அணுகு முறையை மேற் கொண்டுள்ளதாகவும், இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்துவதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது அமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா.செயல்படுவதை தெளிவாக நிரூபிக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
- கிம்முக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க தலைவராக அவரது சகோதரி கிம் யோ-ஜோங் அறியப்படுகிறார்.
- கிம் மகளின் பெயர் கிம் ஜூ அய் என்றும், அவர் கிம்மின் மூத்த மகள் என்றும் நம்பப்படுகிறது.
பியாங்யாங்:
கிழக்கு ஆசிய நாடான வடகொரியா பெரும்பாலும் ஒரு மர்ம தேசமாக இருந்து வருகிறது. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது அவ்வளவு எளிதாக வெளியுலகத்துக்கு தெரிந்துவிடாது.
இந்த மர்ம தேசத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் வழிநடத்தி வருபவர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன். நாட்டில் என்ன நடக்கிறது என்பது எப்படி வெளியுலகத்துக்கு தெரியாதோ, அதே போலவே கிம் ஜாங் அன்னின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
கிம்முக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க தலைவராக அவரது சகோதரி கிம் யோ-ஜோங் அறியப்படுகிறார். இவரை தவிர்த்து கிம்மின் மனைவி குறித்தோ அவரது பிள்ளைகள் குறித்தோ பெரிதாக எந்த தகவல்களும் கசிந்தது இல்லை.
திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகே கிம்மின் மனைவி ரி சோல் ஜூ வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். கிம்முக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும். அதில் இருவர் பெண் குழந்தைகள், ஒருவர் ஆண் குழந்தை என்றும் கூறப்படுகிறது. இதுவரை அவர்கள் பொதுவெளியில் தோன்றியதில்லை.
இந்த நிலையில் கிம் முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிம் மகளின் பெயர் கிம் ஜூ அய் என்றும், அவர் கிம்மின் மூத்த மகள் என்றும் நம்பப்படுகிறது.
வடகொரியா நேற்று முன்தினம் அமெரிக்கா வரை சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது. இந்த சோதனையை கிம் தனது மகள் கிம் ஜூ அய்யுடன் சேர்ந்து நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் அவர் தனது மூத்த மகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், தனக்கு பிறகு தனது மகள் அதிகாரத்துக்கு வருவதை அவர் சூசகமாக சொல்வதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
- வடகொரியா சமீப காலமாக ஏவுகனை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
- வடகொரியா வீசிய ஏவுகனை ஒன்று தென் கொரியா எல்லை அருகே விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
பியாங்யாங்:
வடகொரியா சமீப காலமாக ஏவுகனை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்கா கூட்டு போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகனை சோதனை நடக்கிறது.
சமீபத்தில் வடகொரியா வீசிய ஏவுகனை ஒன்று தென் கொரியா எல்லை அருகே விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகனை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா கூறி வருகிறது.
இந்த நிலையில் வடகொரியா அதிபர் ஜிம்ஜாங் உன், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனையை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும் போது, வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தி தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும், இந்த அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு முழுமையான மோதலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அச்சுறுத்தல்கள் பகைமை கொள்கையை தொடர்கிறது. இது அணு ஆயுத தடையை எதிர்த்து பெரிய அளவில் சோதனை செய்ய வடகொரியாவை தூண்டி வருகிறது.
- உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
- கிழக்கு கடல் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சியோல்:
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இது வரை 40-க்கும் மேற்பட்ட சோதனைகளை அந்நாடு நடத்தி அச்சுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது. கிழக்கு கடல் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.
தென்கொரியா அணு ஆயுத சோதனையை தொடங்கி உள்ளதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியதாக தெரிகிறது.
- வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.
- தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.
இதற்கிடையே தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி செய்வதற்கு மிரட்டல்விடும் வகையில் நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தியது. தென் கொரியா எல்லையை நோக்கி வீசப்பட்ட ஏவு கணைகளில் ஒன்று தென் கொரியாவின் சோக்கோ நகர் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தென் கொரியாவின் உல்லியுங் தீவில் வான்வழி தாக்குதல் பற்றிய அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியது.
வடகொரியா நோக்கி 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழலில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
இதுதொடர்பாக தென் கொரிய ராணுவம் கூறும்போது, 'வடகொரியா இன்று நீண்ட தூர மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது' என்று தெரிவித்தது.
இந்தநிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. காலை 7.48 மணி அளவில் ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்தது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா கூறும்போது, 'ஜப்பான் தீவு கூட்டத்தின் மேலே ஏவுகணை சென்றது கண்டறியப்பட்டதால் உடனே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த தகவலை சரிபார்த்த பிறகு ஏவுகணை ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை. ஆனால் ஜப்பான் கடலில் விழுந்ததை உறுதி படுத்தி உள்ளோம்' என்றார்.
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஜப்பானின் வடக்கு பகுதியில் 3 பிராந்தியங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று வட கொரியா ஏவுகணையை வீசிய பிறகு ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளின் கீழ் பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.
- அமெரிக்கா, தென்கொரியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
- வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.
பியாங்யாங் :
வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இதனை பொருட்படுத்தாமல் கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது பாதுகாப்பு நலன்களுக்குப் பொருந்தாத எந்தவொரு தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவில்லை என்றால், அது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டியிருக்கும். கடுமையான ராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா மிகவும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை கையில் எடுக்கும்" என கூறப்பட்டுள்ளது.






