search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா.பொதுச் செயலாளர் செயல்படுகிறார்- வடகொரியா விமர்சனம்
    X

    அன்டோனியோ குட்டரெஸ், சோ சோன் ஹுய்

    அமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா.பொதுச் செயலாளர் செயல்படுகிறார்- வடகொரியா விமர்சனம்

    • ஏவுகணை சோதனைக்கு நடத்திய வடகொரியாவுக்கு ஐநா.சபை கண்டனம் தெரிவித்தது.
    • ஐ.நா.இழிவான அணுகுமுறையை மேற் கொண்டுள்ளதாக வடகொரியா கருத்து.

    பியோங்யாங்:

    தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு நடத்திய வடகொரியாவுக்கு ஐநா.சபை கண்டனம் தெரிவித்தது.

    எந்தவொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்வதை வடகொரியா உடனடியாக கைவிட வேண்டும் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தமது அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் வட கொரியா வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சாசனத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகள் உள்பட அனைத்து விஷயங்களிலும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் சமத்துவத்தைப் பேணுவதே சரியான பணி என்று கூறியுள்ளார்.

    ஆனால் அவற்றை புறக்கணித்து, ஐ.நா.பொதுச்செயலாளர் மிகவும் இழிவான அணுகு முறையை மேற் கொண்டுள்ளதாகவும், இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்துவதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது அமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா.செயல்படுவதை தெளிவாக நிரூபிக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.

    Next Story
    ×