என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் போர்: ரஷியாவுக்கு 50 நாட்கள் கெடு.. இல்லாவிட்டால்... - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
    X

    உக்ரைன் போர்: ரஷியாவுக்கு 50 நாட்கள் கெடு.. இல்லாவிட்டால்... - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

    • நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப் இதைத் தெரிவித்தார்.
    • ரஷிய அதிபர் புதின் அழகாக பேசுகிறார், குண்டுகளையும் வீசுகிறார் என்று டிரம்ப் கூறினார்.

    உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷியா மீது கடுமையான வரிகளை விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப் இதைத் தெரிவித்தார்.

    "50 நாட்களுக்குள் ஒப்பந்தம் இல்லாவிட்டால், 100% இரண்டாம் நிலை வரிகளை விதிப்போம்" என்று அவர் கூறினார்.

    மேலும், "வர்த்தகம் போர்களை முடிவுக்குக் கொண்டுவர மிகவும் பயனுள்ளது" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

    இதற்கிடையில், டிரம்ப்-பின் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கான சிறப்புத் தூதர் ஜெலன்ஸ்கியை கீவ்வில் சந்தித்துள்ளார். முன்னதாக ரஷிய அதிபர் புதின் அழகாக பேசுகிறார், குண்டுகளையும் வீசுகிறார் என்று டிரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×