என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரானின் ஏவுகணைகளை நொறுக்குவோம்- டிரம்ப்
    X

    ஈரானின் ஏவுகணைகளை நொறுக்குவோம்- டிரம்ப்

    • அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம்.
    • ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது.

    ஜெனீவாவில் ஈரான்- அமெரிக்கா இடையே நடந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை தோல்விடையந்தது. இதனை தொடர்ந்து இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் நகரங்கள் மீது ராணுவத் தாக்குதல்கள் அமெரிக்க ராணுவம் நடத்தி வருகிறது.

    ஈரான் அதிபர் அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது. ஈரானில் ஆட்சியில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம். ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தும் நிர்மூலமாக்குவோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில் உலகத்திலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

    இதனை தொடர்ந்து, ஈரான் மீதான தாக்குதலுக்கு சிங்கத்தின் கர்ஜனை என இஸ்ரேல் பெயர் சூட்டியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேல், அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×