என் மலர்
நேபாளம்
- ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
- சிபிஎன்-யுஎம்எல் கடசி 44 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.
காத்மாண்டு:
நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேரடியாக தேர்வு செய்யப்படும் 165 தொகுதிகளில் இதுவரை 162 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆளுங்கட்சியான நேபாள காங்கிரஸ் 55 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் கடசி 44 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆட்சியமைக்க 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் நேபாள காஙகிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுபற்றி நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பிரகாஷ் மான் சிங் (வயது 66) கூறுகையில், 'ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அனைத்து தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி, விகிதாச்சார வாக்கு முறை அடிப்படையில் ஒதுக்கப்படும் இடங்கள் தீர்மானிக்கப்பட்ட பிறகு, பாராளுமன்ற கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்போம்' என்றார்.
நேபாள காங்கிரஸ் கட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் 6 தலைவர்கள் உள்ளனர். அவர்களில் பிரகாஷ் மான் சிங்கும் ஒருவர்.
- மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
- தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக்காலம் பணியாற்றவில்லை.
இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதேபோல் மொத்தமுள்ள 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் ஆளும் நேபாள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (யூ.எம்.எல்) தலைமையிலான இடதுசாரி மற்றும் இந்து சார்பு கூட்டணிக்கும் இடையே பலப்பரீட்சை நிலவுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேர் பகதூர் தூபா வெற்றி பெற்றார்.
தனது சொந்த தொகுதியான தன்குடாவில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஷேர் பகதூர் தூபா 25 ஆயிரத்து 534 வாக்குகளை பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சாகர்தாகல் 13 ஆயிரத்து 42 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் 61 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
- தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காத்மாண்டு:
நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுன்றம் தேர்தலில் போட்டியிடும் 2,412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சைகள்.
பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் மொத்தமுள்ள 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டனர். மாலை 5:00 மணிக்கு ஓட்டுப் பதிவு நிறைவடைந்தது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர். தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
காத்மாண்டு:
நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த தேர்தலில் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுன்றம் தேர்தலில் போட்டியிடும் 2,412 வேட்பாளர்களில் 867 பேர் சுயேட்சைகள். முக்கிய அரசியல் கட்சிகளில், சிபிஎன்-யுஎம்எல் 141 வேட்பாளர்களையும், நேபாள காங்கிரஸ் 91 வேட்பாளர்களையும், சிபிஎன்-மாவோயிஸ்ட் சென்டர் 46 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
பாராளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல் மொத்தமுள்ள 550 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 330 பேர் நேரடியாகவும் 220 பேர் விகிதாசார முறையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். ஆளும் நேபாள காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் தொங்கு பாராளுமன்றம் அமையலாம் என்றும், போதுமான அரசியல் ஸ்திரதன்மையை வழங்க வாய்ப்பில்லாத அரசு அமையும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் இறுதி முடிவுகள் ஒரு வாரத்திற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச எல்லையோரம் உள்ள 77 மாவட்டங்களிலும் 72 மணி நேரத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில், இந்தியா-நேபாள எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாள் என மொத்தம் 48 மணி நேரம் மது விற்பனை, மது குடித்தல் மற்றும் அவற்றை வாகனங்களில் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
- நேபாளத்தில் இன்று இரவு ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
- கடந்த சில தினங்களில் தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காத்மண்டு:
நேபாள நாட்டில் இன்று இரவு 7.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானது நினைவிருக்கலாம்.
இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- நேபாளத்தில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
- நேற்று காலை முதல் இன்று காலை வரை 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காத்மண்டு:
நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
- நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
- தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
காத்மண்டு:
நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மணிப்பூரிலும் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.
தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
- இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் இன்று காலை 4.37 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த அக்டோபர் 19ம் தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று ஜூலை 31ம் தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காத்மண்டு மற்றும் பொகாரா நகரங்களுக்கு இடையே கடுமையான தாக்கம் ஏற்பட்டது. அதில், அந்நாட்டு மக்களில் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.
- சர்மா ஒலி தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார்
- இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து, சர்மா ஒலி தலைமையிலான அரசு வரைபடம் வெளியிட்டது.
காத்மாண்டு:
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், காலாபானி, லிபுலெக், லிம்புயதுரா (இந்திய பகுதிகள்) உள்பட ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு கொண்டு வருவோம். எங்களது கட்சி, தேசத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா - நேபாள உறவுகள் நீண்ட காலமாக சுமூகமாகவே உள்ளது. ஆனால் நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி பதவியேற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.கே.பி.சர்மா ஒலி பிரதமராக இருந்தபோது அவரது அரசாங்கம் இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது.
அப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினார் சர்மா ஒலி. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் கே.பி.சர்மா ஒலி இவ்விவகாரத்தை மீண்டும் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல் நேபாள காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான ஷேர் பகதூர் தியூபா தனது தேர்தல் பிரசாரத்தில் கூறும்போது, ராஜதநதிர முயற்சிகள், பரஸ்பர உறவுகளின் அடிப்படையில் நேபாளத்தின் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
நேபாளத்துக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் நேபாள பொது தேர்தலின்போது போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுக்காக 200 வாகனங்களை இந்தியா அன்பளிப்பாக நேபாளத்துக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
- நேபாளத்திற்கு இதுவரை 2,400 வாகனங்களை அன்பளிப்பாக இந்தியா வழங்கியுள்ளது.
- நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
காத்மண்டு:
நேபாள நாட்டில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டுக்கான இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, நேபாள நிதி மந்திரி ஜனார்தன் சர்மாவிடம் இந்தியா சார்பில் 200 வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்தலின்போது, பல்வேறு நேபாள அமைப்புகளுக்கு, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் இந்த அன்பளிப்பை இந்தியா வழங்கியுள்ளது என காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த 200 வாகனங்களில், தேர்தலின்போது பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக பாதுகாப்பு படைகளுக்கு 120 வாகனங்கள் வழங்கப்படும். மீதமுள்ள 80 வாகனங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ளும். இதுவரை இந்தியா சார்பில் நேபாள நாட்டிற்கு 2,400 வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன என்று காத்மண்டு நகரில் உள்ள நேபாளத்திற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது
- நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
- இதையடுத்து காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காத்மண்டு:
நேபாள நாட்டின் அதிபராக இருப்பவர் பித்யா தேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, அதிபரின் செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகாராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
- முதல்கட்ட விசாரணையில் பேருந்தை ஓட்டுனர் வேகமாக ஓட்டி சென்றதே காரணம் என தெரியவந்துள்ளது.
- நேபாள நாட்டை பொறுத்தவரை அங்கு ரோடுகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.
நேபாளம் பாரா மாவட்டம் நாராயன்காத் என்ற இடத்தில் இருந்து பிர்குஞ்ச் என்ற இடத்துக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50 பேர் பயணம் செய்தனர்.
அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள ஆற்றில் கவிழ்ந்தது. இதில் பேருந்துக்குள் சிக்கி கொண்ட பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள். இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக இறந்தனர். 35 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
முதல்கட்ட விசாரணையில் பேருந்தை ஓட்டுனர் வேகமாக ஓட்டி சென்றதே காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நேபாள நாட்டை பொறுத்தவரை அங்கு ரோடுகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன.
மேலும் பெரும்பாலான பகுதிகள் மலைத் தொடர்களால் சூழப்பட்டு உள்ளதால் ரோடுகள் வளைவாக அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்து நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






