என் மலர்tooltip icon

    நேபாளம்

    • நேபாள விமான விபத்தில் 67 பேர் பலியானதால், அந்நாட்டு அரசு தேசிய துக்க தினம் அனுசரிக்கிறது.
    • விமான விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்கு உள்ளானது. இந்த விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    விபத்தைத் தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நேபாள விமான விபத்தில் பலியானதை தொடர்ந்து அந்நாட்டு அரசு இன்று தேசிய துக்க தினத்தை கடைப்பிடிக்கிறது.

    மேலும், விமான விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    • விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
    • நான்கு பேர் பொக்காராவுக்கு சென்று பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

    காத்மாண்டு:

    நேபாளத்தில் இன்று 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இன்று இரவு வரை 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்தில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த 72 நபர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது தெரியவந்துள்ளது.

    விமான விபத்து பற்றி கேள்விப்பட்டதும் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் இந்தியர்கள் உட்பட விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது" என பிரதமர் மோடி கூறி உள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    விமானத்தில் பயணித்த இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாலா (வயது 25), பிஷால் சர்மா (வயது 22), அனில் குமார் ராஜ்பர் (வயது 27), சோனு ஜெய்ஸ்வால் (வயது 35), சஞ்சயா ஜெய்ஸ்வால் என எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த ஐந்து பேரில் நான்கு பேர் இந்தியாவில் இருந்து வெள்ளிக்கிழமை காத்மாண்டு வந்துள்ளனர். பிரபல சுற்றுலா தலமான பொக்காராவுக்கு சென்று பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்ததாக, நேபாளத்தின் சார்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் குமார் ஷா என்பவர் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 'நாங்கள் இந்தியாவில் இருந்து ஒரே வாகனத்தில் வந்தோம். அவர்கள் பசுபதிநாதர் கோவில் அருகில் உள்ள கோசாலையில் தங்கினர். பொகாராவுக்கு புறப்படுவதற்கு முன்பாக தாமெலில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். பொக்காராவில் இருந்து கோரக்பூர் வழியாக இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தனர்' என்றார்.

    விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களில் 4 பேர் உத்தர பிரதேசத்தின் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர். தூதரகத்தில் இருந்து வரும் தகவலுக்காக இந்திய அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். 

    • விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

    காத்மாண்டு:

    நேபாளத்தில் பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேபாள விமானம், கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் தரையை நோக்கி பாய்ந்து வரும்போது பதிவு செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.

    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணித்துள்ளனர்

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீப்பற்றி கரும்புகை எழுந்ததால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. இன்று மாலை நிலவரப்படி 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

    விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் புஷ்ப கமல் தால் பிரசந்தா அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.

    விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

    சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    காத்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக தெரிகிறது. விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    • நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதி கிடைக்காது.

    காத்மாண்டு:

    நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஸ்ட்ரா வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நேபாள நாட்டவர்கள் வெளிநாடுகளில் நிலம், வீடு, சொத்து, கடன் பத்திரம் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதி கிடைக்காது. வங்கி விதியின்கீழ் வெளிநாட்டில் யாரும் இது போன்ற பணம் செலுத்துவதில் ஈடுபடக்கூடாது. இந்த விதியை யாராவது மீறினால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்தின் மத்திய வங்கி பணப்புழக்க நெருக்கடியை காரணம் காட்டி வாகனங்கள் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாக்லுங் மாவட்டத்தில் 2 முறை நிலநடுக்கம் பதிவானது.
    • பாதிப்பு தொடர்பாக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    காத்மண்டு:

    நேபாள நாட்டில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்லுங் மாவட்டத்தில் நள்ளிரவு ஒரு மணி முதல் 2 மணிக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதிகாரி சௌர் பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், குங்கா பகுதியில் 2வதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும் பதிவானது. இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, வீடுகள், கட்டிடங்கள் குறித்த சேதமோ  குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

    இதனிடையே நேபாள நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியிலும் அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.1 என்ற அளவில் பதிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமித்தார்.
    • புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

    காத்மண்டு:

    275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதனால் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் தாம் பிரதமர் பதவி வகிப்பதாக ஒப்பந்தமும் செய்தது.

    மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலை அளித்தார்.

    இதற்கிடையே, நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமித்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், நேபாள நாட்டின் பிரதம மந்திரியாக புஷ்ப கமல் தஹால் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 3 துணை பிரதமர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமனம் செய்தார்.
    • புஷ்ப கமல் தஹார் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

    காத்மண்டு:

    275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

    நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதையடுத்து முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் தாம் பிரதமர் பதவி வகிப்பதாக ஒப்பந்தமும் செய்தது.

    இதற்கிடையே, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா இன்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து பிரதமருக்கான உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார்.

    இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமனம் செய்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • சோப்ராஜின் கொலை பட்டியலில் சிக்கியவர்கள் சுமார் 30 இருக்கும் என கூறப்படுகிறது.
    • இந்தியாவிலும் 21 ஆண்டுகள் சிறைக்கம்பிகளை எண்ணினான்.

    காத்மாண்டு :

    இந்திய தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் 1944-ம் ஆண்டு பிறந்தவன் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). சட்டப்படி பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருந்த இவன், இளம் வயதில் இருந்தே குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

    1970-களில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தொடர் கொலைகளை அரங்கேற்றி உலகையே அதிர்ச்சிக்குள் வைத்திருந்தான். இளம்பெண்களை குறிவைத்து கொலை செய்து வந்த சோப்ராஜின் கொலை பட்டியலில் சிக்கியவர்கள் சுமார் 30 இருக்கும் என கூறப்படுகிறது.

    இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது மற்றும் பிரான்சை சேர்ந்தவருக்கு விஷம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியாவிலும் 21 ஆண்டுகள் சிறைக்கம்பிகளை எண்ணினான்.

    நேபாளத்தில் கடந்த 1975-ம் ஆண்டு அமெரிக்க பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சோப்ராஜ், கடந்த 2003-ம் ஆண்டு அந்த நாட்டு போலீசில் சிக்கிக்கொண்டான்.

    இதில் ஆயுள் தண்டனை பெற்று காத்மாண்டு மத்திய சிறையில் சோப்ராஜ் அடைக்கப்பட்டிருந்தான்.

    இந்த வழக்கில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தண்டனைக்காலம் முடியும் நிலையில், சோப்ராஜின் உடல்நிலை, முதுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமீபத்தில் நேபாள சுப்ரீம் கோர்ட்டு அவனை விடுதலை செய்தது. அத்துடன் 15 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தவும் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று அவன் காத்மாண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். அத்துடன் அவனை உடனடியாக பிரான்சுக்கு நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் முதலில் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரான்ஸ் அனுப்பி வைக்கப்பட்டான்.

    இந்த தகவலை வெளியிட்ட நேபாளம் உள்துறை அமைச்சக செயலாளர் பனிந்திரா மணி பொகாரெல், சார்லஸ் சோப்ரா அடுத்த 10 ஆண்டுகளுக்கு நேபாளத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

    பல நாடுகளை கதிகலங்க வைத்த சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சார்லஸ் சோப்ராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
    • சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார்.

    காத்மாண்டு:

    கொலை, கொள்ளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சை கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் 1975-ல் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ், 2008-ம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு 78 வயதாகிறது.

    இதற்கிடையே, வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டார்.

    • சார்லஸ் சோப்ராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
    • சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை சோப்ராஜ் திருமணம் செய்தார்.

    காத்மாண்டு:

    கொலை, கொளளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், தனது 52வது வயதில் இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2004ம் ஆண்டு நேபாள அரசு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கியது. சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு 78 வயதாகிறது.

    இந்நிலையில், வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.

    தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருப்பது கைதிகளுக்கான மனித உரிமைக்கு பொருந்தாத செயல் என்று நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஏஎப்பி செய்தி வெளியட்டுள்ளது. சோப்ராஜை சிறையில் அடைக்க, அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், இன்றைக்குள் அவரை விடுதலை செய்து, 15 நாட்களுக்குள் நாடு திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    1975இல் அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ்,

    2008 ஆம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×