search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாள விமான விபத்து  - விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு
    X

    நேபாள விமான விபத்து - விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு

    • நேபாள விமான விபத்தில் 67 பேர் பலியானதால், அந்நாட்டு அரசு தேசிய துக்க தினம் அனுசரிக்கிறது.
    • விமான விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்கு உள்ளானது. இந்த விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

    விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    விபத்தைத் தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நேபாள விமான விபத்தில் பலியானதை தொடர்ந்து அந்நாட்டு அரசு இன்று தேசிய துக்க தினத்தை கடைப்பிடிக்கிறது.

    மேலும், விமான விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×