search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாள பிரதமராக புஷ்ப கமல் தஹால் இன்று பதவியேற்றார்
    X

    பிரதமராக பதவியேற்ற புஷ்ப கமல் தஹால்

    நேபாள பிரதமராக புஷ்ப கமல் தஹால் இன்று பதவியேற்றார்

    • நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹாலை அந்நாட்டு ஜனாதிபதி நியமித்தார்.
    • புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

    காத்மண்டு:

    275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். நேபாளத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதனால் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியுடன் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்தது. முதல் இரண்டரை ஆண்டுகள் தாம் பிரதமர் பதவி வகிப்பதாக ஒப்பந்தமும் செய்தது.

    மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தனக்கு ஆதரவளிக்கும் 169 எம்.பி.க்களின் பட்டியலை அளித்தார்.

    இதற்கிடையே, நேபாளத்தின் பிரதமராக புஷ்ப கமல் தஹால் பிரசந்தாவை நியமித்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், நேபாள நாட்டின் பிரதம மந்திரியாக புஷ்ப கமல் தஹால் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 3 துணை பிரதமர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    புஷ்ப கமல் தஹர் மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×