என் மலர்tooltip icon

    மியான்மர்

    • மியான்மரில் 2021, பிப்ரவரி மாதத்தில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    • சீன வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தருவதற்கு மியான்மர் நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பர்மா:

    சீனா தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம் மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    மீகாங் டெல்டா பகுதியில் நீர்மின்சாரத் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.

    இந்நிலையில், மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக மியான்மர் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், மியான்மர் நாட்டில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகும் என தெரிவித்தார்.

    • ஆங் சாங் சூகிக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • சூகியின் கூட்டாளியான ஷா மியூட் மவுங் மீது ஊழல் குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளது.

    யாங்கூன் :

    மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆங் சாங் சூகியின் நெருங்கிய கூட்டாளிக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சூகியின் கூட்டாளியான ஷா மியூட் மவுங் மீது ஊழல் குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் அதற்கு தண்டனையாக 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளராக ஷா மியூட் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×