என் மலர்
இஸ்ரேல்
- போர் சூழலிலும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்தததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
- இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்றநண்பனாக துணை நிற்கிறது.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. மேலும், 100-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின்போது இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பைடன் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இஸ்ரேல் வந்துள்ளார்.
இருவரின் சந்திப்பின்போது, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில்," அக்டோர்பர் 7ம் தேதி ஹமாஸ் 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு குழந்தைகளை கூட கொன்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்ஐ-யை விட மோசமானது.
இந்த சூழலிலும் அமெரிக்க அதிபர் இஸ்ரேல் வந்தததற்கு இஸ்ரேல் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இஸ்ரேல் மக்களுக்கு அமெரிக்கா தற்போது உற்றநண்பனாக துணை நிற்கிறது.
காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இப்போது அதை பார்க்கும்போது அந்த தாக்குதல் வேறு சிலரால் நடத்தப்பட்டதாக அறிகிறேன். ஹமாஸை வீழ்த்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், "இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும்" என்று ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோ பைடன் மேலும் கூறுகையில்," ஹமாஸ் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும், 31 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பிணைக் கைதிகளாக பொது மக்களையும், குழந்தைகளையும் கூட வைத்துள்ளனர்" என்றார்.
- காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது யார்?
- இஸ்ரேல் ராணுவம்- பாலஸ்தீன அமைப்பு பரஸ்பர குற்றச்சாட்டு
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்றிரவு காசாவில் உள்ள மருத்துவமனை மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்களால் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தென்பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான மக்கள் மருத்துவமனையில் அகதிகளாக தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகளுடன் அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியது என்று பாலஸ்தீனம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், நாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை. பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் (Islamic Jihad) அமைப்புதான் ஏவுகணை தாக்குதலின்போது தவறாக கையாண்டு தாக்கு நடத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு பொறுப்பு ஏற்கவில்லை. இஸ்ரேல் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இந்த நிலையில், டிரோன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், எங்கள் தாக்குதல் இதுபோன்று சேதத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவை சுட்டிக்காட்டிய இஸ்ரேல் ராணுவம், நாங்கள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியிருந்தால் அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருக்கும். ஆனால், மருத்துவமனையில் அப்படி பள்ளம் ஏற்படவில்லை.
எங்கள் தாக்குதலில், மிகப்பெரிய அளவில் தீப்பற்றி எரியும் சம்பவம் இருக்காது. ஆனால், மருத்துவமனையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அதிக அளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.
எங்கள் தாக்குதலின்போது துண்டு துண்டான கூரைகள் அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும். அதுபோன்று இல்லாமல் பக்கத்து கட்டங்களில் பெரிய பெரிய துண்டுகளாக அப்படியே உள்ளன.
இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், இருவரின் உரையாடலை இடைமறித்த ஆடியோவையும் வெளியிட்டுள்ளது.
- காசா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டது அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன்.
- என் இதயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் உள்ளது.
நியூயார்க்:
காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேலும், ஹமாசும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.
காசா மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என்றும் தாக்குதல் நடத்தி விட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாகவும் ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்தார்.
இந்த நிலையில் காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தனது எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:-
காசா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டது அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என் இதயம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் உள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியிடங்கள் பாதுகாக்கப்படுபவைகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்
- அரபு தலைவர்களை இன்று ஜோர்டானில் சந்தித்து பேச இருந்தார் ஜோ பைடன்
ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காசாவில் உள்ள மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காசாவில் உள்ள மருத்துவமனை ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் தாக்கியதாக காசா மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதேவேளையில், பாலஸ்தீனத்தில் இருந்து தவறாக கையாளப்பட்ட ஏவுகணை வெடிப்பால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று இஸ்ரேல் கூறி வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் செல்லும் அவர், கடந்த 7-ந்தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தங்களுடைய ஆதரவை இஸ்ரேலுக்கு தெரிவிக்க இருக்கிறார். மேலும், காசா ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஜோ பைடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர், பாலஸ்தீன தலைவர் ஆகியோரை சந்தித்து பேச இருந்தார்.
இதனால் காசா- இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
- காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
டெல் அவிவ்:
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அல் அக்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகளே காரணம். அவர்கள் வீசிய ராக்கெட்கள் குறிதவறி மருத்துவமனை மீது விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
- காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
- அல்-அக்லி மருத்துவமனை மீது நடந்த வான்வழி தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, வடக்கு காசாவில் தாக்குதல் நடத்துவதற்காக அங்குள்ள மக்களை தெற்கு காசாவுக்கு இடம்பெயரும் படி இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியதன் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தெற்கு காசாவில் அடைக்கலம் புகுந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை வீசின. தெற்கு காசா நகரங்களான ரபா மற்றும் கான் யூனிசில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ரபாவில் 27 பேரும், கான் யூனிசில் 30 பேரும் கொல்லப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.
- சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.
காசா:
காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது.
அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:-
இஸ்ரேல் விமான தாக்குதல்களில், 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.
காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயல்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.
இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
- பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
காசா:
இஸ்ரேல் படையினரின் வான்வழித் தாக்குதலால் காசா மக்கள் திக்கு தெரியாமல் திண்டாடி வருகிறார்கள்.
ரபாத் மற்றும் கான்யூனிசில் 3 வீடுகள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலிய விமான தாக்குதலில் ஒரே இரவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.
இஸ்ரேலின் உத்தர வின்படி காசா நகரில் இருந்தும், வடக்கு பகுதிகளில் இருந்தும் வெளியேறி குடும்பங்கள் தான் கொல்லப்பட்டனர்.
காசாவின் தெற்கில் உள்ள கான்யூனிஸ், ரபா, டெல் அல்பலாஹ் ஆகிய பகுதிகளில் கடுமையான குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பலர் கட்டிடங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை அங்குள்ள மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு காசாவில் குடிநீர், உணவு, மின்சாரம், மருந்து பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக எகிப்து உதவி பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளது.
பாலஸ்தீனர்களுக்கான ஐ.நா. அகதிகள் நிவாரண அமைப்பினர் கூறும்போது, 'தெற்கு காசாவில் குடிநீர், உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், மின்சாரம் இல்லாததால் மருத்துவ மனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கண் முன்பே மனித பேரழிவு ஏற்படுகிறது' என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பினர் கூறும்போது, 'மொத்தம் 23 லட்சம் மக்கள் கொண்ட காசாவில் தினசரி ஒருவருக்கு ஒரு லிட்டருக்கு குறைவான நீர் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் நிறுத்தபட்டதால் பிறந்த குழந்தைகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் அபாயத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
- இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- காசாவில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
பின்னர் அவர் கூறுகையில், "இந்தியர்கள் எங்கெல்லாம் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை. நாங்கள் ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி, இப்போது ஆபரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம். இது ஐந்தாவது விமானம், நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான், மேலும் எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வருகிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்.
- இஸ்ரேலில் பிரதமர் மோடி மிகவும் விரும்பப்படும் தலைவர்
- பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார்
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் சிக்கலை தீர்க்க இஸ்ரேல் தற்போது முயலவில்லை. இப்பொழுது புதியதாக எழுந்திருக்கும் தீவிர பிரச்சனையை தீர்க்க போராடுகிறோம். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்தால்தான் மீண்டும் இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.
இந்தியா மீது இஸ்ரேல் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் மிகவும் விரும்பப்படும் தலைவர். பிற நாடுகளை விட இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் எங்கள் பக்கம் நின்றது. மோடி உடனடியாக கண்டனம் செய்தார். பிற நாட்டினர் உடனடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை; பிறகுதான் தெரிவித்தனர்.
அமெரிக்கர்கள் எங்களுக்கு துணை நிற்கின்றனர். மேலும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவுடன் தற்போது வலுவான உறவு உள்ளது. நாங்கள் இந்தியாவை நம்புவதால், அவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.
சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். அதில் சுமார் 1000 இந்தியர்கள் மட்டுமே இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பினார்கள்; அவர்களையும் நாங்கள் பத்திரமாக அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு நவோர் கிலான் தெரிவித்தார்.
- இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் பெரும்பாலான உடல்கள் வைக்கப்பட்டுள்ளன
- உயிரிழந்தவர்களின் உடல்களை யூதர்கள் முழுமையாக எரியூட்ட வேண்டும்
கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமை காலை, இஸ்ரேல் நாட்டிற்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர், அங்குள்ள பொதுமக்கள் மீது பெரும்தாக்குதலை நடத்தி 1400க்கும் மேற்பட்ட பொதுமக்களை பயங்கரமான முறையில் கொன்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக கூறி பாலஸ்தீன காசா பகுதி மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் பட்டியலிடப்பட்டு ஏராளமான ஸ்ட்ரெட்சர்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அந்நாட்டின் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் (National Center of Forensic Medicine) பெரும்பாலான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இது போல் உள்ள மேலும் 4 மையங்களிலும் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.
உருக்குலைந்த உடல்களை அவர்கள் ஆய்வு செய்த பின் தாங்கள் கண்டறிந்ததாக கூறும் தகவல்கள் மூலமாக ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் பரிதாப நிலை குறித்து அறிய முடிகிறது.

அந்த உண்மைகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது.
இது குறித்து அந்த தடயவியல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பல டிரக்குகளில் இன்னமும் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் மிகவும் அதிகமாக உள்ளது. பல உடல் பாகங்களை ஒன்று சேர்க்கும் மிக சோகமான மற்றும் கடினமான செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒருவருடன் ஒருவராக கட்டப்பட்டு, கொல்லப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்ட உடல்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமான செயல். அனைத்து உடல்களும் அடையாளம் தெரியாத அளவு எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. யூத நம்பிக்கையின்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக எரியூட்டப்பட வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த முடியாத அளவு அவர்கள் உடல்களை எரியூட்டி கொலை செய்துள்ளனர். குழந்தைகளை தாக்குதலில் இருந்து காக்க இறுகி அணைத்தபடி பலர் உயிர் விட்டுள்ளனர்.

பெண்கள் கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளன. அவர்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டுள்ளனர். பல உடல்களில் பத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஒரே நேரத்தில் துளைத்திருக்கின்றன. மரபணு மாதிரிகளையும், கைரேகை அடையாளங்களையும், பல்வரிசை குறிப்புகளையும் கொண்டு ஆய்வு செய்து உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயல்கின்றோம்.
உயிரிழக்கும் போது அந்த மக்கள் எத்தகைய துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை நாங்கள் உலகினருக்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள் நடக்காதவற்றை கூறுவதாக உலகின் சில நாடுகள் கூறின. ஒரு சிலர் நாங்கள் நாய்களின் எலும்புகளை காட்டுவதாக குற்றம் சாட்டினார்கள். எனவே உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம். இதுவரை இப்படியொரு கொடுமையை எங்கள் பணியில் நாங்கள் கண்டதில்லை.
இவ்வாறு தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
- ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணை வீசி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி. இவர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வரப்படுபவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒசாமா அல் மசினி பலியானார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.






