என் மலர்tooltip icon

    உலகம்

    தொடங்கி விட்டீர்கள்... முடிவு உங்கள் கையில் இல்லை: அமெரிக்கா, இஸ்ரேலை எச்சரித்து தாக்குதலை தொடங்கிய ஈரான்
    X

    தொடங்கி விட்டீர்கள்... முடிவு உங்கள் கையில் இல்லை: அமெரிக்கா, இஸ்ரேலை எச்சரித்து தாக்குதலை தொடங்கிய ஈரான்

    • தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளனர்.
    • இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது.

    அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானை சுற்றிவளைத்து கடல் வழியாகவும், வான் வழியாகவும் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிரம்ப், ஈரான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    இந்த நிலையில், இஸ்ரேல்- அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் குறித்து ஈரான் கூறுகையில், 'நீங்கள் தொடங்கி வைத்து விட்டீர்கள்... இனி முடிவு உங்கள் கையில் இல்லை... இதை தொடங்கியது நீங்கள் தான்... உங்களை எச்சரிக்கிறோம். என்று கூறியுள்ளது. மேலும் தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது. இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு ஈரான் ஏவுகணைகளை தடுத்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

    Next Story
    ×