என் மலர்tooltip icon

    பிரேசில்

    • பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்.
    • அதிபர் தேர்தலில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலியா:

    உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிட்டார். தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில்தான் பலப்பரீட்சை நடந்தது.

    தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் சில்வாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தன. கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக இருந்தது.

    பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபாராக வெற்றிபெற்றுள்ளார். புதிய அதிபராக தேர்வான லுலு டா சில்வா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார்.

    தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ 49.10 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

    • கண்விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
    • கண்களை உருட்டி அவர் பார்க்கும்போது அனைவரையும் மிரள வைக்கும்

    கண்கள் பெரிதாக இருப்பவர்களைப் பார்த்தால் "முட்டைக் கண்" என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், அந்த முட்டைக் கண்களுக்கே டப் கொடுக்கும் வகையில், உண்மையாகவே கண்களுக்குள் இருந்து 2 முட்டைகள் வெளியில் எட்டிப் பார்ப்பதைப் போல கண்விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த சிட்னி டி கார்வாலோ மெஸ்கிடா.

    இவர் தனது கண் இமைகளை விட்டு 18.2 மில்லி மீட்டர் தூரம் விழிகளை வெளியில் கொண்டு வந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கண்களை உருட்டி அவர் பார்க்கும்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும்.

    தனக்கு உள்ள இந்த வித்தியாசமான திறமையானது, தன் தந்தை, தாய் மற்றும் தன்னை படைத்த இறைவன் தந்த பரிசு என்கிறார் சிட்னி. மேலும், கண் விழிகளை வெளியில் தள்ளிவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும்போது, சில நொடிகள் பார்வையை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார். எனினும் ஆபத்தான இந்த சாதனைக்காக அவர் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார்.

    • தற்போதைய அதிபர் ஜெயீர்போல்சனரோ 43.5 சதவீத ஓட்டுகள் பெற்றார்.
    • தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் லூயிஸ் இனாசியோ லுலாடாசில்வாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது.

    உலகில் 4-வது பெரிய ஜனாநாயக நாடாக பிரேசில் திகழ்ந்து வருகிறது. இந்த நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறை தண்டணை அனுபவித்த லூயிஸ் இனாசி யோலுலாடா சில்வா உள்பட 9 பேர் போட்டியிட்டனர்.

    9 பேர் களத்தில் இருந்தாலும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிபர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவியது. உள்ளூர் நேரப்படி நேற்று 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். நாடு முழுவதும் வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்தது. இதனால் 98.8 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.

    பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் ஆரம்பம் முதல் லூயிஸ் இனாசியோலுலாடா சில்வா முன்னிலை வகித்தார். மொத்தம் பதிவான ஓட்டுக்களில் அவர் 48.1 சதவீத வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்த படியாக தற்போதைய அதிபர் ஜெயீர்போல்சனரோ 43.5 சதவீத ஓட்டுகள் பெற்றார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால் குறைந்த சதவீத ஓட்டுகள் தான் வித்தியாசம் இருந்தது. போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் குறைந்த சதவீத ஓட்டுகளே பெற்றனர்.

    பிரேசில் தேர்தல் நடைமுறைப்படி அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத ஓட்டுகள் பெற வேண்டும். இல்லையென்றால் அதிக வாக்குகள் பெற்ற முதல் 2 வேட்பாளர்களுக்கு இடையே 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். நேற்று நடந்த தேர்தலில் யாருக்கும் 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் லூயிஸ் இனாசியோ லுலாடாசில்வாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. அதன்படியே அவர் முதல் சுற்று தேர்தலில் முன்னிலை வகிக்கிறார். 2-வது சுற்று தேர்தலில்தான் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும்.

    • இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது.
    • இந்தியாவுடனான சீனாவின் உறவு கடினமான கட்டத்தில் உள்ளது.

    சாவ் பாலோ:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: 

    இந்தியா – பிரேசில் இடையே சிறந்த நட்புறவு நிலவி வருகிறது. ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு சிறந்த இணைப்புப் பாலமாக திகழும் இந்திய வம்சாவளியினருக்கு நன்றி.

    உறவு ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது, அதைத் தக்க வைக்க பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். சீனா அண்டை நாடு, ஒவ்வொருவரும் தங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறார்கள்.

    இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இரு நாடுகளுடனான உறவில் கறை படிந்த நிழல் போல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராணுவ வீரர்கள் அங்கு வாகனங்களில் விரைந்து சென்று குடிசைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரியோடி ஜெனிரோ:

    பிரேசிலியின் முக்கிய நகரமான ரியோடி-ஜெனிரோவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு குடிசை பகுதியில் கனரக வாகனங்களில் செல்லும் பொருட்கள் திருட்டு போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு வாகனங்களில் விரைந்து சென்று குடிசைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    திடீரென அவர்கள் குருவியை சுடுவது போல கண்ணில் பட்ட இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 18 பேர் இறந்தனர். பலர் குண்டு காயம் அடைந்தனர். இச்சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களை மாற்றிக்கொள்ள சில ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
    • உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன்.

    பிரேசிலியா:

    சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடக்கிறது.

    அப்படி பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக கிம் கர்தாஷியன் உருவ அமைப்பை பெறுவதற்காக கடந்த 12 ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார். ஜெனிபர் பாம்ப்லோனா என்ற அந்த மாடல் அழகி தன்னுடைய 17 வயதில் இருந்தே கிம் கர்தாஷியனை போல மாறுவதற்கான அறுவை சிகிச்சைகளை செய்து வந்துள்ளார்.

    அப்படி 12 ஆண்டுகளில் சுமார் ரூ.4 கோடி செலவில் 40-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். இதனால் ஜெனிபர் பாம்பலோனா பெருமளவில் பிரபலமானார். சமூக வலைதளத்தில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நடந்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு குறைபாடு காரணமாக ஜெனிபர் பாம்ப்லோனாவின் இயற்கை அழகு மாறி வித்தியாசமான உருவ அமைப்புக்கு மாறினர்.

    ஒரு கட்டத்தில் தான் அறுவை சிகிச்சைகளுக்கு அடிமையானதை உணர்ந்த அவர் தான் மகிழ்ச்சியாக இல்லை என்பதையும் வெளிப்படுத்தினார். எனவே மீண்டும் இயற்கையான தனது தோற்றத்தை பெற விரும்பிய ஜெனிபர் அதற்கான சிகிச்சையில் இறங்கியுள்ளார். மேலும் உருவத்தை மாற்ற செய்ய அறுவை சிகிச்சைகள் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களுடன் பரப்புரை செய்து வருகிறார்.

    ×