என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த இளம்பெண் கைது- 2 குழந்தைகள் அதிரடியாக மீட்பு
- குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
- குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
செங்குன்றம்:
சென்னையில் குழந்தைகளை கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தன. இதனை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளதாக வித்யா என்ற இளம்பெண்ணை புழல் போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
வித்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி அம்பத்தூர், ஒடகடம் பகுதியில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
இந்த குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பிடிபட்ட வித்யாவிடம் குழந்தை கடத்தல் தொடர்பில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் முழு தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.






