திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள்- நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இம்மியளவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது. தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுக அரசை என்றும் சும்மா விடாது!
திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள்- நயினார் நாகேந்திரன்
Published on

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள்!

கிருஷ்ணகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70 வயது முதியவரை கொன்று, அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 60 வயதான மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என ஒரு வாரகாலமாக தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இம்மியளவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது.

திறனற்ற நிர்வாகத்தால் திக்கெட்டிலும் கயவர்களை சுதந்திரமாகத் திரியவிட்டு, தினந்தினம் பெண்களையும் குழந்தைகளையும் நரக வேதனையை அனுபவிக்கச் செய்துவிட்டு, வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்று கூற நாகூசவில்லையா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

பல வீர மங்கைகளை உலகிற்கு ஈந்த தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுக அரசை என்றும் சும்மா விடாது!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com