என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
- அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே...
- பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கல்வி கண் திறந்து
ஆலைகள் பல தந்து
அணைகள் பல உயர்த்தி
தமிழகத்தை வளர்த்தி
தலைவர்களில் தலைவனாய்
பார் போற்றும் முதல்வனாய்
அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே..
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள அவதமணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மலர் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பரிசுகள் வழங்கினார்.






