என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2 கிராம் தங்கத்திற்காக... ஒரு கூத்தாடிப் பையன கட்டிப்பிடித்து... தமிழனுக்கு அறிவு வேணாமா?- வேல்முருகன் சர்ச்சை பேச்சு
    X

    2 கிராம் தங்கத்திற்காக... ஒரு கூத்தாடிப் பையன கட்டிப்பிடித்து... தமிழனுக்கு அறிவு வேணாமா?- வேல்முருகன் சர்ச்சை பேச்சு

    • கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று 2ம் கட்டமாக விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

    அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கிய நிகழ்ச்சியில் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக இன்றும் த.வெ.க. தலைவர் விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும்போது சில மாணவ- மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் ஹார்டின் போன்ற சைகை காட்டியும், சிலர் ரோஜா பூ கொடுத்தும், சிலர் கட்டி அணைத்தும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்சையாக பேசியுள்ளார்.

    இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் வேல்முருகன் பேசியதாவது:-

    நடிகனை குற்றம் சொல்ல மாட்டேன். ஒரு வயசு பெண்ணை கூட்டிட்டு போறான்.. 2 கிராம் பரிசு கொடுத்ததும் நம் முட்டாள் பயளுங்க.. அறிவு வேணாமா தமிழனுக்கு..?

    பெற்று, வளர்த்து ஆளாக்கி நாளை மாற்றான் மனைவியாக வாழ வேண்டிய ஒரு பெண்ணை அப்பா, அம்மா, ஊடகப் பத்திரிகையாளர்கள் என அத்தனைப் பேர் முன்பு ஒரு சினிமா கூத்தாடிப் பயனை கட்டிப்பிடிக்க எப்படி அனுமதிக்கிற..?

    இது என்ன ஈனப்பிறவி..? தமிழனுடைய பிறவியா இது? விஜய் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அஜித் நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. ரஜினி நடித்திருக்கிறாரா பாராட்டுங்க.. அதைவிட்டு அப்படியே விஜய் அண்ணா என்று.. பெற்றோர்கள் எப்படி இதையெல்லாம் அனுமதிக்கிறீங்க..?

    இதுவா தமிழ் சமூகம்? இதுவா தமிழருடைய பாரம்பரியம்? இதுவா வீரக்குல பெண்கள் வாழ்ந்த மண் என்கிறோம் ?

    எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க. எந்த கூத்தாடி பயளுகளுடைய பிறந்தநாள் என்றால் என்ன..? அவர்களின் படம் நூறு நாள் ஓடினால் என்ன? ஓடவிட்டால் என்ன ? அவனா உனக்கு சோறு போடப் போறான்..? அவனா உன் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட போறான்? அவனா பள்ளிக்கூடம் கட்ட போறான் ?

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×