என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

யூடியூப் பிரபலம் ஸ்பீடை பைக்கில் துரத்தி தளபதி என்று கத்திய த.வெ.க. தொண்டர்கள் - வீடியோ வைரல்
- உலகளவில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட சேனல்களில் ஒன்றாக ஐஷோஸ்பீட் இருக்கிறது.
- எந்தவொரு நாட்டிற்குச் சென்றாலும் அங்கிருந்தபடியே லைவ் போடுவார்.
இன்றைய சமூக வலைத்தள பயன்பாடு என்பது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் செல்ல முடியாத இடங்கள் குறித்து தெரியாதவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக பலர் யூடிப் சேனல்கள் தொடங்குகின்றனர். இதில் சிலரே மக்கள் மனதில் இடம்பிடித்து நிலைத்து நிற்கின்றனர். அவர்கள் செல்லும் நாடு, ஊர், அனுபவங்கள் குறித்து நேரடியாக ஒளிபரப்பி லைக்குகளை அள்ளுகின்றனர்.
அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் ஸ்பீட். இவர் ஐஷோஸ்பீட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகளவில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட சேனல்களில் ஒன்றாக ஐஷோஸ்பீட் இருக்கிறது.
மேலும், இவர் எந்தவொரு நாட்டிற்குச் சென்றாலும் அங்கிருந்தபடியே லைவ் போடுவார். அதன்படி தற்போது தாய்லாந்து சென்றுள்ள ஸ்பீட், காரில் பயணித்தபடி லைவ் போட்டுள்ளார். அப்போது அவரது காரை பின்தொடர்ந்து வந்த தமிழகத்தை சேர்ந்த இரு வாலிபர்கள் டிவிகே, டிவிகே, தளபதி விஜய் என்று கோஷமிடுகிறார்கள். மேலும், அந்த வாலிபர்கள் Chief minister of india Vijay என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு புரியாததால் ஸ்பீட் கொடுக்கும் ரியாக்ஷனும், Chief minister of india Vijay என்பதும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மாநிலத்திற்கு முதலமைச்சர் இருப்பார். ஆனால் இந்தியாவிற்கே முதலமைச்சர் என்று கூறுவது சமூக வலைத்தள பயனர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.






