என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

    • மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
    • மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.


    Live Updates

    • 21 Aug 2025 5:37 PM IST

      மதுரை மாநாட்டில் "ஒரு காலம் வரும்.. என் கடமை வரும்.. இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்" என்று எம்.ஜி.ஆர் பாடலை விஜய் பாடினார்.

    • 21 Aug 2025 5:35 PM IST

      மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "கொள்கையை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பதா... எதிர்க்கட்சியாக இருக்கும் போது போங்க மோடி, ஆளுங்கட்சியாக வந்த பிறகு வாங்க மோடி. Stalin uncle, it's very wrong uncle" என்று தெரிவித்தார்.

    • 21 Aug 2025 5:35 PM IST

      மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "கூடிய சீக்கிரம் மக்களை போய் சந்திக்கப் போறேன். அவங்களோடு மனசு விட்டு பேசப் போறேன். அதுக்கு அப்புறம் இந்த சாதாரண முழக்கம், இடிமுழக்கமாக மாறும்" என்று தெரிவித்தார்.

    • 21 Aug 2025 5:32 PM IST

      மதுரை மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், “சஸ்பென்ஸிலேயே சஞ்சாரம் செய்யுங்கள்” என்று தெரிவித்தார்.

    • 21 Aug 2025 5:30 PM IST

      மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "234 தொகுதிகளிலும் விஜயே போட்டி என நினைத்து உழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • 21 Aug 2025 5:29 PM IST

      மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் மாஸ்-னா என்னனு தெரியுமா?... அவர் உயிருடன் இருக்கும் வரை முதலமைச்சர் பதவி யாருக்கும் கிடைக்கவில்லை. எதிரியையே தன்னிடம் கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர்" என்று தெரிவித்தார்.

    • 21 Aug 2025 5:28 PM IST

      மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "நமக்கு எதிராக வரும் அத்தனை கூக்குரல்களையும் சின்னதா ஒரு சிரிப்போட கடந்துவிடுவோம்; இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல்" என்று தெரிவித்தார்.

    • 21 Aug 2025 5:27 PM IST

      மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "ஷூட்டிங்கில் வந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்றனர்; அதற்கு பலரை எடுத்துக்காட்டாகவும் கூறினர். அதேபோல விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாகாது என்றனர். இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது, இந்த கூட்டம் ஓட்டாக மட்டுமல்ல... மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் இருக்கும்" என்று தெரிவித்தார்.

    • 21 Aug 2025 5:26 PM IST

      மதுரை மாநாட்டில் பேசிய விஜய், "அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்தக் கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது" என்று தெரிவித்தார்

    Next Story
    ×